நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 5, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 5, 2019

முக்கிய தினம்

ஏப்ரல் 5 – தேசிய கடல் தினம்

  • 100 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், 1919 ஆம் ஆண்டில், தி சிண்டியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிட்டட்டின் முதல் கப்பல், எஸ் எஸ் லாய்லிட்டி, ​​ரஷ்ய சென்றது இது இந்தியாவின் கப்பல் வரலாற்றின் ஒரு முக்கியமான நாளாகும் .
  • தேசிய கடல் தினத்தின் 56 வது பதிப்பின் 2019 கருப்பொருள்: “Indian Ocean-An Ocean of opportunity”
  • ஏப்ரல் 5, 1964 அன்று முதல் தேசிய கடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய கடல் தின விருதின் பெயர் வருணா விருது ஆகும்.

மாநாடுகள்

இந்தியா – நேபாளம் முதலீட்டு உச்சி மாநாட்டு – மே  மாதம் நடைபெறும்

  • நேபாளத்தின் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (FNCCI) மே மாதம் காத்மாண்டுவில் நேபாள முதலீட்டு உச்சிமாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்தியா – இத்தாலி இடையே வழக்கமான தூதரக உரையாடலை நடத்த முடிவு

  • இந்தியாவும் இத்தாலியும் வழக்கமான தூதரக உரையாடலை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. 7 வது வெளிநாட்டு அலுவலக ஆலோசனைக் கூட்டத்தில் (FOC) இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

தரவரிசைகள்

ஃபிஃபா தரவரிசை

  • இந்தியா – 101வது இடம், 1வது இடம் – பெல்ஜியம், 2வது இடம் – பிரான்ஸ், 3வது இடம் – பிரேசில்

 தேசிய நிகழ்வுகள்

உலக சுகாதார நாள் ஒற்றுமைக்கான மனித சங்கிலி

  • உலக சுகாதார அமைப்பு (WHO) உடன் இணைந்து சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் உலக சுகாதார நாள் (ஏப்ரல் 7) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றுமைக்கான மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. 2019 உலக சுகாதார நாள் கருப்பொருள்: Universal Health Coverage: Everyone, Everywhere.

தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர்  கி.மு. 905 முதல் 696 வரையிலான காலப்பகுதியை சார்ந்தது

  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி தளத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மாதிரிகளின் கார்பன் டேட்டிங் தகவல்களின் மூலம் ஆதிச்சநல்லூர் கி.மு. 905 முதல் கி.மு. 696 வரையிலான காலப்பகுதியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
  • கார்பன் டேட்டிங் மாதிரிகள் அறிக்கை அமெரிக்காவின் பீட்டா அனாலிடிக் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டடு பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மின்சார மோட்டார் சைக்கிள் அறிமுகம்

  • மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளர், இது இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

திட்டங்கள்:

GPWL 2019 திட்டம்

  • பெண்களுக்குக்கான கல்வி திட்டகுழு வேதிகா மற்றும் கவனிப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) இணைந்து பெண்கள் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய திட்டம் (GPWL) 2019 முதல் பதிப்பினை ஆரம்பித்துள்ளனர்.

வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

15வது நிதி ஆணையத்தின் உயர் மட்ட விவாதம்

  • அரசாங்கத்தின் மட்டத்திலான நிதி உறவுகள் மீதான 15வது நிதி ஆணையத்தின் உயர் மட்ட விவாதம் நடைபெற்றது. இது 15வது நிதிஆணையத்தின் தலைவரான ஸ்ரீ என்.கே.சிங் அவர்களால் நடத்தப்பட்டது மற்றும் உலக வங்கி, OECD மற்றும் ADB உடன் நடத்தப்படும் கூட்டு விவாதமாகும்.

ஒப்பந்தங்கள்

மாஸ்கோ பங்குசந்தையுடன் பிஎஸ்இ, இந்தியா INX ஒப்பந்தம்

  • BSE மற்றும் இந்திய சர்வதேச பங்குச்சந்தை (INX) மாஸ்கோ பங்குசந்தை (MOEX) உடன் முதலீட்டாளர் சமூகத்தையும் நிறுவனங்களையும் இணைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாஸ்கோ பங்குச்சந்தையுடன் ஒப்பந்தமிடும் முதல் இந்தியப் பங்குசந்தை BSE & INX, ஆகும்.

பாதுகாப்பு நிகழ்வுகள்

கத்தார் கடற்படை மேஜர் ஜெனரல் இந்திய பயணம்

  • கத்தார் எமிரி (QENF) கடற்படை மேஜர் ஜெனரல் கமாண்டர், அப்துல்லா ஹாசன் எம் அல் சுலைட்டி யின் அதிகாரபூர்வ பயணம் (ஏப்ரல் 02 முதல் 05 வரை) நிறைவுபெற்றது.

விளையாட்டு நிகழ்வுகள்

2020 ஒலிம்பிக் டென்னிஸ் விளையாட்டு நடைமுறை மாற்றம்

  • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ITF) 2020 ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி வடிவங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. ஆண்கள் ஒற்றையர் தங்க பதக்கப் போட்டி ஐந்து டைப்ரேக் சுற்றுகளுக்கு பதிலாக இனி மூன்று டைப்ரேக் சுற்றுகளாக நடக்க உள்ளது.
ஏப்ரல் 5 நடப்பு நிகழ்வுகள் வீடியோகிளிக் செய்யவும்

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!