நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 18 & 19, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 18 & 19, 2019

முக்கிய தினம்:

ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம்

 • நினைவு சின்னங்கள் மற்றும் தளங்கள் மீதான சர்வதேச கவுன்சில் (ICOMOS) 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஐ உலக பாரம்பரிய தினமாக அறிவித்தது. இதற்கு 1983 இல் யுனெஸ்கோவின் பொதுச் சபை ஒப்புதல் அளித்தது. 2019 கருப்பொருள்: Rural Landscapes

நியமனங்கள்:

வி.பி. பதக் மற்றும் என். காசிநாத் ரயில்வே வாரியத்தின் உறுப்பினர்களாக பொறுப்பேற்ப்பு

 • இந்திய ரயில்வே ஸ்டோர்ஸ் அதிகாரியான ஸ்ரீ வி.பீ. பதக் ரயில்வே வாரிய உறுப்பினராக (பொருள் மேலாண்மை) பொறுப்பேற்றுள்ளார்.
 • இந்திய இரயில் சிக்னல் இன்ஜினியர்ஸ் சேவை அதிகாரி N. காசிநாத் ரயில்வே வாரிய உறுப்பினராக (சிக்னல் & டெலிகாம்) பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய நிகழ்வுகள்:

தமிழ்நாடு:

தமிழ்நாடு லோக் சபா தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு

 • தமிழ்நாட்டில் ஏப்ரல் 18, 2019 அன்று, 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. இதல் 72விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

அமேசான் நிறுவனம் சீனாவில் வர்த்தகத்ததை நிறுத்த முடிவு

 • உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் அமேசான் தனது ஆன்லைன் வர்த்தக விற்பனையகத்தை ஜூலை 18 ம் தேதி முதல் மூட திட்டமிட்டுள்ளது.

ஆசிய தேயிலை கூட்டமைப்பு சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது

 • குயிசோ சீனாவில் ஆசிய தேயிலை கூட்டமைப்பான (ATA), ஐந்து நாடுகளின் வளரும் தேயிலை மற்றும் நுகர்வு ஒன்றியம் தொடங்கப்பட்டுள்ளது.
 • இந்திய தேயிலை சங்கம், சீனா தேயிலை மார்க்கெட்டிங் அசோசியேஷன், இந்தோனேசிய தேயிலை சந்தைப்படுத்தல் சங்கம், ஸ்ரீலங்கா தேயிலை வாரியம் மற்றும் ஜப்பான் தேயிலை சங்கம் ஆகியவை இந்த கூட்டணியின் உறுப்பினர்கள் ஆவர்.

ராயல் என்ஃபீல்ட் சீயோலில் முதல் விற்பனைக்கூடத்தை அமைத்துள்ளது

 • ராயல் என்ஃபீல்ட் தனது வர்த்தகத்தை தென் கொரியா தலைநகர் சீயோலில் தொடங்கியுள்ளது. தனது அதிகாரப்பூர்வ விநியோகிப்பாளர்-பங்குதாரர்ராக விண்டேஜ் மோட்டார்ஸ் (கிஹிங் இண்டர்நேஷனல்) ஐ நியமித்துள்ளது.

சர்வேதேச நிகழ்வுகள்:

பாலைவனத்தில் செவ்வாய் கிரகத்தின் அடித்தள மாதிரி

 • கன்சு மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் மழைக்காடுகளால் சூழப்பட்ட பாலைவன பகுதியில் “மார்ஸ் பேஸ் 1” என்ற செவ்வாய் கிரகத்தின் அடித்தள மாதிரியை சீன நிறுவனம் அமைத்துள்ளது. இளம் வயதினரை இடையே செவ்வாய் கிரக சூழலை வெளிப்படுத்தவும் – மற்றும் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
 • சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் ஜின்சாங்கில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கோபி பாலைவனத்தில் சி-ஸ்பேஸ் ப்ராஜெக்டின் “MARS BASE 1” அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு நிகழ்வுகள்:

சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கடற்படை ஆய்வில் இந்திய கப்பல்கள் பங்கேற்பு

 • சீனாவின் கடற்படைத் தினத்தின் 70 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச கடற்படை ஆய்வில் இந்திய கப்பல்கல் கொல்கத்தா மற்றும் சக்தி பங்கேற்க உள்ளது. சர்வதேச கடற்படை ஆய்வு ஏப்ரல் 21 ஆம் தேதி சீனாவின் கிங்டாவோவில் நடைபெறவுள்ளது.

 HAL ஜெட் பயிற்சியாளரின் சோதனைகளை  தொடர முடிவு

 • ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) அதன் இடைநிலை ஜெட் பயிற்சியாளரை (IJT) சோதிக்கும் பணியை மூன்று ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் தொடர முடிவுசெய்துள்ளது

விளையாட்டு நிகழ்வுகள்:

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2019

 • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் நடக்கவிருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் உலக மல்யுத்த தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பங்கேற்கவுள்ளார்.

ஏழு வயது இந்திய வீராங்கனை 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்

 • இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 2019 போட்டியில் ஏழு வயது இந்திய வீராங்கனை கோலகட்லா அலனா மீனாட்சி இரண்டு தங்க பதக்கங்களைப் வென்றார்.

PDF Download

ஏப்ரல் 18 & 19 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here