நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019

முக்கிய தினம்:

ஏப்ரல் 17 – உலக ஹீமோபிலியா தினம்

  • உலக ஹீமோபிலியா தினம், ஹீமோபிலியா மற்றும் பிற இரத்தப்போக்கு கோளாறுகளுக்கான சர்வதேச விழிப்புணர்வு தினமாகும். இது ஏப்ரல் 17 அன்று ஆண்டுதோறும் நடைபெறுகிறது, இது உலக ஹீமோபிலியா சம்மேளனத்தின் நிறுவனர் ஃபிராங்க் ஷாநபெலின் பிறந்த நாளன்று அனுசரிக்கப்படுகிறது . 2019 கரு “Reaching Out: The First Step to Care”.

தேசிய நிகழ்வுகள்:

இமயமலை மோட்டார் சைக்கிள் பயணம் கரகோரம் பாஸை அடைந்தது

  • ஏப்ரல் 07 ஆம் தேதி லேவில் இருந்து தொடங்கப்பட்ட 11 உறுப்பினர்கள் கொண்ட ‘ஹிமாலயன் ஹைட்ஸ் மோட்டார் சைக்கிள் பயணம்’ கிழக்கு லடாக், சாங் லா பாஸ் வழியாக 18,176 அடி உயரத்தில் உள்ள கரகோரம் பாஸை அடைந்தது.

HOME EXPO இந்தியா 2019

  • கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியாவின் எக்ஸ்போ மையம் மற்றும் சந்தையில் ஏப்ரல் 16 முதல் 18 வரை, நடக்கவிருக்கும் Home Expo India 2019 இன் 8 வது பதிப்பு தொடங்கப்பட்டது. இந்த மூன்று நாள் கண்காட்சி, கைத்தொழில்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலால் (EPCH) ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.

விண்வெளி அறிவியல்:

துணை கோளான டைட்டனில் திரவ மீத்தேன் நிரப்பப்பட்ட ஏரிகள் கண்டுபிடிப்பு

  • 2017 ஆம் ஆண்டில் நாசாவின் காசினி விண்கலம் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் குளிர்ச்சியான டைட்டனின் ஏரிகளில் சில பகுதிகளில் திரவ ஹைட்ரோகார்பன்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மாநாடுகள்:

இழப்பு மற்றும் சேதம் பற்றிய தேசிய பணிமனை

  • புது தில்லியில், காலநிலை தொடர்பான இழப்பு, சேதம் மதிப்பீடு, சேதம் குறைக்கும் முயற்சி மற்றும் முகவரி அணுகுமுறைகள் மீது வளர்ந்து வரும் முன்னோக்குகளில் ஒரு நாள் தேசிய ஆலோசனை பணிமனையை பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ராவின் தலைமையில் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் நடத்தியது.

ஒப்பந்தம்:

மாநில TB மையம்  இந்தியா தபால் (India Post) இடையே ஒப்பந்தம்

  • மாநில சுகாதார மையம், ஆரம்ப சுகாதார மையங்களில் இருந்து சோதனை செய்யவேண்டிய மாதிரிகளை மாவட்ட தலைமையகங்களில் மூலம் காட்ரிட்ஜ் அடிப்படையிலான நியூக்ளிக் அமிலம் பெருக்க சோதனை (CBNAAT) ஆய்வகங்களுக்கு அனுப்ப அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம்.

வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

மிதக்கும் சூரிய மின் ஆலை அமைக்க SPICநிறுவனம் முடிவு

  • சிங்கப்பூரை சார்ந்த AM சர்வதேச ஹோல்டிங்ஸ் என்ற SPICஇன் ஹோல்டிங் நிறுவனம், மற்றும் மணாலி பெற்றோ நிறுவனம் மிதக்கும் சூரிய ஆற்றல் ஆலை அமைப்பதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் துறைக்குள் நுழைவதை அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நிகழ்வுகள்:

SEA VIGIL பயிற்சி

  • SEA VIGIL பயிற்சி பற்றிய விழிப்புணர்வு விவாதம் 16 ஏப்ரல் 19 அன்று எம்.எஸ்.பவார் தலைமையில் நடைபெற்றது. முதல் இந்திய தேசிய கடற்படை பாதுகாப்பு பயிற்சி SEA VIGIL 22-23 ஜனவரி 19 அன்று நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை – வியட்நாம் மக்கள் இடையே இருதரப்பு கடற்படை பயிற்சி

  • இந்தியக் கடற்படை மற்றும் வியட்நாம் மக்கள் பங்குபெறும் இருதரப்பு கடலோர பயிற்சியின் இரண்டாம் பதிப்பை வியட்நாமில் காம் ரன்ஹ் பே, என்னும் இடத்தில் ஏப்ரல் 13 முதல் 16 வரை.இந்திய கடற்படை மேற்கொண்டது.

நியமனங்கள்:

கெய்ர்ன் எண்ணெய் & எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி – அஜய் தீக்ஸிட்

  • வேதாந்தா லிமிடெட்டின் கெய்ர்ன் எண்ணெய் & எரிவாயு நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) அஜய் தீட்சித்தை நியமனம் செய்துள்ளது. இதற்குமுன் இந்த பொறுப்பில் சுதிர் மாதுர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்:

கூகிள் மற்றும் ஆப்பிள் செயலி பயன்பாட்டிலிருந்து TikTok நீக்கப்பட்டது

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை TikTok ஐ தடை செய்யும்படி தமிழ்நாடு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. இதற்கிணங்க TIK TOK பதிவிறக்கங்களை தடைசெய்து, இந்தியாவில் Google மற்றும் ஆப்பிள் செயலி பயன்பாட்டிலிருந்து TikTok நீக்கப்பட்டது.

PDF Download

ஏப்ரல் 17 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!