நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 02, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 02, 2019

தேசிய நிகழ்வுகள்

அருணாச்சல பிரதேசம்

AFSPA ஆயுத படை கண்காணிப்பை பகுதியாக குறைத்துள்ளது

  • 32 ஆண்டுகளுக்கு பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் ஒன்பது மாவட்டங்களில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) கண்காணிப்பை 3 மாவட்டங்களில் பகுதியாக குறைத்துள்ளது.

தமிழ்நாடு

சென்னை விமானநிலையத்தில் மெட்ரோ ரயில் நேரங்களை காட்சிப்படுத்தப்பட ஏற்பாடு

  • விமான பயணிகள் போக்குவரத்து முறைமையை ஊக்குவிக்க, சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாயில்களில் மெட்ரோ ரயில் நேரங்களைக் காட்சிக்குரியதாக்கும் ஏற்படுகளை விரைவில் செய்யவுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்:

அமெரிக்கா F-35 போர் ஜெட் திட்டத்தில் துருக்கி பங்கு பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது

  • ரஷ்ய S-400 வான் பாதுகாப்பு முறையை வாங்க துருக்கியின் தலைநகரான அன்காரா முடிவு செய்த பிறகு, அமெரிக்கா தனது F-35 போர் ஜெட் திட்டத்தில் துருக்கி பங்கு பெறுவதை நிறுத்தி வைக்க முடிவுசெய்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா பாதுகாப்புத் தலைவர்கள் சந்திப்பு

  • கொரிய தீபகற்பத்தின் அணுவாயுதமயமாக்கல் தொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாட்ரிக் ஷானஹான், தென்கொரியா தேசிய பாதுகாப்புச் செயலர் ஜியோங் கியோங்-டூவை வாஷிங்டனில் உள்ள பென்டகனில் சந்தித்தார்.

 செயலி & இணையத்தளம்

வாட்ஸாப் (Whatsapp) ‘tipline’ சேவை அறிமுகம்

  • 2019 ல் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தல்களுக்காக, இந்தியாவில் சாத்தியமான வதந்திகள் மற்றும் தவறான தகவலை சரிபார்க்கும் “tipline” சேவையை Whatsapp  அறிமுகப்படுத்தியுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்:

முக்கிய தொழில்துறையின் குறியீட்டு 2019

  • எட்டு முக்கிய தொழில்துறையின் ஒருங்கிணைந்த குறியீடு (பிப்ரவரி 2019 வரை) 125.8 புள்ளிகளாக உள்ளது, இது பிப்ரவரி 2018 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.1per centhigheras ஆக உயர்ந்துள்ளது.
  • ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலங்களில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2018-19 ஆம் நிதியாண்டில், GST வரி சேகரிப்பில் மார்ச் 2019 மாதம் அதிக வருவாயை பதிவு செய்தது

  • 2019 மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய், 1,06,577 கோடியாகும் இதில் மத்திய அரசுக்குரிய GST எனப்படும் CGST ரூ. 20,353 கோடியும், மாநில அரசுக்குரிய GST (SGST) ரூ. 27,520 கோடியும் வசூலாகியுள்ளது.
  • GST அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மார்ச் 2019 வசூலாகி இருக்கும் வரித்தொகையே மிக உயர்ந்ததாகும்.
  • கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட இந்த ஆண்டு மார்ச் மாத வருவாய் 15.6% உயர்ந்துள்ளது.

NMDC 30 மில்லியன் டன் உற்பத்தி மட்டத்தை தாண்டிவிட்டது

  • நாட்டில் இரும்பு தாது உற்பத்தியின் மிகப்பெரிய உற்பத்தியாளர், எனப்படும் தேசிய கனிம மேம்பாட்டு கழகம் (என்எம்டிசி), 2018-19 ஆம் ஆண்டு உற்பத்தியை மூன்றாவது முறையாக 30 மில்லியன் டன் ஆகவும் மற்றும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியுள்ளது.

 MOIL 2018-19 ஆம் நிதியாண்டில் அதிகபட்ச வருவாயை பதிவு செய்துள்ளது

  • இந்தியாவில் மாங்கனீசு தாது உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளரான MOIL லிமிடெட், அதன் வருவாயில் இதுவரை இல்லாத மிக அதிகமான வருவாயை (ரூ. 1440 கோடி) ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 9% அதிகமாகும்.
  • முக்கிய தொழித்துறை உற்பத்திகள் 2018-2019 ஆண்டு 15% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018-19 ஆண்டு மொத்த உற்பத்தி 13 லட்சம் மெட்ரிக் டன்னாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மாநாடுகள்

இந்தியா-உக்ரைன் IU-WGTEC இன் 4 வது கூட்டம்

  • இந்தியா-உக்ரைன் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான செயல் குழுவின் (IU-WGTEC) 4-வது கூட்டம் புது தில்லியில், ஏப்ரல் 02, அன்று நடைபெற்றது.
  • இந்திய பிரதிநிதியாக பிட்யூட் பெஹரி ஸ்வைன் (Bidyut Behari Swain), வெளிநாட்டு வர்த்தக கூடுதல் செயலாளர், (சிஐஎஸ்) மற்றும் உக்ரேனிய பிரதிநிதியாக சைட் திரு. ஒலெக்ஸியோ ரோச்கோவ்வும் (Oleksiy Rozhkov) பங்குபெற்றனர்.

நியமனங்கள் மற்றும் ராஜினாமா

ராஜன் ஆனந்தன் Google பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • கூகிள் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைமை அதிகாரியான ராஜன் ஆனந்தன் எட்டு வருடத்திற்கு பிறகு அவருடைய அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • ராஜனுக்கு பதிலாக விகாஸ் அக்னிஹோத்ரி இடைக்கால பொறுப்பை ஏற்ப்பார். இவர் தற்போது Google இன் விற்பனை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

பாதுகாப்பு நிகழ்வுகள்

இந்திய இராணுவ தளபதி அமெரிக்கா பயணம்

  • பிபின் ராவத், இந்திய ராணுவ தளபதி 02 ஏப்ரல் முதல் ஏப்ரல் 05, 2019 வரை அதிகாரபூர்வ பயணமாக அமெரிக்க செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பயணம் அமெரிக்கா – இந்தியா ராணுவ உறவுகளுக்கு உத்வேகம் அளிப்பதோடு, மூலோபாய ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

AUSINDEX-19, 3வது பதிப்பு விசாகபட்டணத்தில் தொடங்கியது

  • ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கடற்படைகள் இடையேயான இருதரப்பு கடல்வழங்கல் டூரன்ஸ்-வகுப்பு பல-தயாரிப்பு நிரப்புக் கருவி கொண்ட பயிற்சிக்கான மூன்றாம் பதிப்பு – AUSINDEX-19 விசாகப்பட்டினத்தில் 02 ஏப்ரல் 19 அன்று தொடங்கியது.

ஏப்ரல் 2 நடப்பு நிகழ்வுகள் videoகிளிக் செய்யவும்

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!