நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 4,5 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 4,5 2018

முக்கியமான நாட்கள்

நவம்பர் 5 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

  • 2015 ஆம் ஆண்டில், உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக நவம்பர் 5ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை பரிந்துரைத்தது.
  • இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் AMCDRR (பேரழிவு ஆபத்து குறைப்புக்கான ஆசிய அமைச்சக மாநாட்டில்) பேரழிவு ஆபத்து குறைப்பு (DRR) உடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

தேசிய செய்திகள்

அசாம்

கவுஹாத்தியை ஆறு தென் ஆசிய நாடுகளுடன் இணைக்கத் திட்டம்

  • கிழக்குக் கொள்கையை செயல்படுத்துவதில் பெருமளவு ஊக்கத்தை கொடுப்பதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாத அளவில் ஆறு தெற்காசிய நாடுகளுடன் கவுஹாத்தியை விமான நிலையத்துடன் இணைக்கத் திட்டம்.

புது தில்லி

ஐஜிஐ விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு  உதவி வசதி

  • புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவி மற்றும் தகவல் வசதியை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தொடங்கி வைத்தார்.
  • மும்பை, சென்னை, கொல்கத்தா, கயா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் விரைவில் 24X7 வசதியளிப்பு கவுண்டர்களை திறக்க சுற்றுலா அமைச்சகம் திட்டம்.

மேகாலயா

3 வது தேசிய ஆயுர்வேத தினம் 2018

  • 3 வது தேசிய ஆயுர்வேத தினம் – 2018, ஷில்லாங் மேகாலயாவில் அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் “Ayurveda for Public Health” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜார்கண்ட்

திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாகிறது ஜார்கண்ட்

  • திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாக ஜார்கண்ட், நவம்பர் 15ந்தேதிக்குள் உருவாகும்.

சர்வதேச செய்திகள்

காமன்வெல்த் நாடுகளுக்கு ஆயுதப்படைகளில் சேரும் தகுதிகள் தளர்த்தப்பட்டது

  • காமன்வெல்த் நாடுகளுக்கு பிரிட்டிஷ் ஆயுதப்படைகளில் வேலைவாய்ப்பு பெறும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தளர்த்துவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

அறிவியல் செய்திகள்

நாசாவின் ஹப்பிள் காஸ்மிக் புன்னகை முகத்தை ஒத்திருக்கும்[ஸ்மைலி] புள்ளியை கண்டறிந்தது

  • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி வானில் ஒரு புன்னகை முகத்தை ஒத்திருக்கும்[ஸ்மைலி] விண்மீன் குழுக்களை கண்டறிந்தது.

வணிகம் & பொருளாதாரம்

பிளாக்செயின் வர்த்தக நிதி பரிவர்த்தனை

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் [ஆர்.ஐ.எல்] & எச்எஸ்பிசி பிளாக்செயின் வர்த்தக நிதி பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியது. 

தரவரிசை & குறியீடு

நீர் தரக் குறியீடு

  • 122 நாடுகளில் 120 வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

மாநாடுகள்

ஆயுர்வேதத்தில் தொழில்முனைவோர் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான தேசிய கருத்தரங்கு

  • ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில்முனைப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த இரண்டுநாள் தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் தொடங்கியது.
  • இந்தக் கருத்தரங்கை நித்தி ஆயோக் ஒத்துழைப்புடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
  • ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இத்துறையில் வர்த்தக வாய்ப்புகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு

  • இந்திய போட்டி ஆணையம் (CCI) ஏற்பாடு செய்துள்ள பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு தில்லியில் நடைபெறுகிறது. பொது கொள்முதல் சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி ஆலோசனை மற்றும் முக்கிய பங்குதாரர்களை  ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

1 வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி(CIIE)

  • சீனாவின் தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், ஷாங்காயில் நடைபெறும் முதலாவது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் (CIIE) இந்தியாவின் பெவிலியனை அங்கு அமைத்துள்ளது.

திட்டங்கள்

ஆப்ரேஷன் கிரீன்ஸ்

  • ஆப்ரேஷன் கிரீன்ஸ் – நாடு முழுவதும், அனைத்து காலங்களிலும் டி.ஒ.பி பயிர்கள் என அழைக்கப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிவை விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் ஆப்ரேஷன் கிரீன்ஸ் அமல்படுத்தவதுற்கான நெறிமுறை உத்திகளுக்கு அனுமதியை வழங்கியது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் கொரியக் குடியரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • சுற்றுலா மற்றும் விளையாட்டு துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் கொரியக் குடியரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தியா மற்றும் மலாவிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்தியா மற்றும் மலாவி நாட்டுக்கு இடையே குற்றவாளிகளை இரு நாடுகளுக்கு இடையில் ஒப்படைக்கும் ஒப்பந்தம், அணுசக்தி துறையில் சமாதான நோக்கங்களுக்கான ஒத்துழைப்பு, தூதரக மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட்டுகளுக்கு விசா விலக்கு ஆகிய மூன்று உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன.

விருதுகள்

  • சர்வதேச பத்திரிக்கை [பிரஸ்] நிறுவன இந்தியா விருது – நம்ரதா பிஜி அஹுஜா

விளையாட்டு செய்திகள்

SAFF U-15 சாம்பியன்ஷிப்

  • லலித்பூர், நேபாளத்தில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் பங்களாதேஷ் 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் முறையில் பாகிஸ்தானை வென்றது.

சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன்

  • ஜெர்மனியில் நடைபெற்ற சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரிட்டனின் ராஜீவ் ஓசீப்பை தோற்கடித்து இந்தியாவின் சுபாங்கர் டே வென்றார்.

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ், 2018

  • ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!