நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 14 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 14 2019

முக்கியமான நாட்கள்

மார்ச் 14 – உலக சிறுநீரக தினம்

  • சிறுநீரகங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிறுநீரக நோய்களின் பாதிப்பு மற்றும் தாக்கத்தை குறைப்பதற்காக மார்ச் மாதத்தில் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. தீம், ‘அனைவருக்கும் எல்லா இடங்களிலும் சிறுநீரக ஆரோக்கியம்’.

சர்வதேச செய்திகள்

இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்கள் அமைக்க அமெரிக்கா திட்டம்

  • இந்திய மற்றும் அமெரிக்க நாடுகள் இந்தியாவில் ஆறு அமெரிக்க அணுசக்தி ஆலைகளை நிறுவுதல் உட்பட இருதரப்பு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணுசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி ஏற்றுள்ளது.

ஏமன் போருக்கு ஆதரவு அளிப்பதை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க செனட்டில் வாக்குப்பதிவு

  • டொனால்ட் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை மற்றும் ரியாத் உடனான அவரது கூட்டணியைக் கண்டித்த அமெரிக்க செனட், ஏமனில் இரத்தம் தோய்ந்த சவுதி தலைமையிலான போர் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க செனட் வாக்களித்தது.

உலகம் முழுவதும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய பரிந்துரை

  • உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பாளரான போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் விமானங்களை உலகம் முழுவதும் தற்காலிக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
  • எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேர் இறந்ததைத் தொடர்ந்து இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த விமானத்திற்கு தடை விதித்தது .

சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா கணடனம்

  • நாட்டில் சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

வணிகம் & பொருளாதாரம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மனுவை விசாரித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதன் உத்தரவு ஆணையை நிறுத்திவைத்துள்ளது

  • சுவீடன் நாட்டின் எரிக்சன் நிறுவனத்திடம் வாங்கிய கடன் தொகையை செலுத்துவதற்காக வருமான வரித் துறையிடமிருந்து வந்த ரீஃபண்ட் தொகையை விடுவிக்கக் கோரிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மனுவை விசாரித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதன் உத்தரவு ஆணையை நிறுத்திவைத்துள்ளது.

மாநாடுகள்

இந்தியாபாகிஸ்தான் இடையிலான முதல் கூட்டம்

  • கர்தார்பூர் காரிடாருக்கான விதிமுறைகளை விவாதிக்க மற்றும் இறுதி செய்ய இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் கூட்டம் அட்டாரி-வாகா எல்லையின் இந்தியப் பகுதியில் நடைபெறும். இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமிர்தசரசை வந்தடைந்தனர்.

இந்தியாவில் எரிசக்தி மாடலிங் மன்றத்தில் முதல் ஒர்க்ஷாப்

  • நிதி ஆயோக் மற்றும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனம் (USAID), இணைந்து இந்தியாவில் எரிசக்தி மாடலிங் மன்றத்தின்(IEMF) முதல் ஒர்க்ஷாப்பிற்கு ஏற்பாடு செய்தது, இது  இந்தியாவின் ஆற்றல் எதிர்காலம் தொடர்பான கருத்துக்கள், சூழ்நிலை-திட்டமிடல் மற்றும் கலந்துரையாடுவதற்கான ஒரு தளமாக அமைந்தது.

நியமனங்கள்

  • பி.சி.சி.

    . நிர்வாகத்தில் உள்ள சர்ச்சைகளைத் தீர்க்க மத்தியஸ்தராக பிஎஸ் நரசிம்மாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது

பாதுகாப்பு செய்திகள்

மேன் போர்ட்டபிள் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை

  • ராஜஸ்தான் பாலைவனத்தில் இரண்டாவது முறையாக உள்நாட்டில் தயாரான, குறைந்த எடை, எளிதாக பயன்படுத்தக்கூடிய மேன் போர்ட்டபிள் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையை (MPATGM) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதித்தது.

விருதுகள்

இந்திய ஜனாதிபதி கேலண்ட்ரி விருதுகளை வழங்கினார்

  • இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பாதுகாப்பு முதலீட்டு விழாவில் கேலண்ட்ரி விருதுகள் மற்றும் புகழ்பெற்ற சேவைக்கான விருதுககளை வழங்கினார்.

விளையாட்டு செய்திகள்

சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு 2019

  • மார்ச் 14 முதல் மார்ச் 21 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு 2019 நடைபெறும், இந்த விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க 200 நாடுகளை அழைத்து சாதனை படைத்துள்ளது. 200 நாடுகளில், 195 நாடுகள் போட்டியில் பங்கேற்கும், ஐந்து நாடுகள் பார்வையாளராக இருக்கும். இது முதல் முறையாக மேற்கு ஆசியாவில் நடைபெறுகிறது.

5 வது SAFF மகளிர் சாம்பியன்ஷிப்

  • தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 5வது SAFF மகளிர் சாம்பியன்ஷிப் அரை இறுதி போட்டிக்கு வங்கதேசம் மற்றும் நேபாளம் தகுதிபெற்றது. சாஃப் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை இந்தத்தொடரில் தோல்வியை சந்தித்தது கிடையாது, இந்தக்கோப்பையை நான்கு முறை இந்தியா வென்றுள்ளது.

PDF Download

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!