நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 13 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 13 2019

தேசிய செய்திகள்

புது தில்லி

பொறுப்பான வணிக நடத்தை தொடர்பான தேசிய வழிமுறைகள்

  • கார்ப்பரேட் விவகார அமைச்சகம் பொறுப்பான வணிக நடத்தை தொடர்பான தேசிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் செயல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வணிகங்களை அறிவுறுத்துகின்றன. இது அனைத்து ஊழியர்களுக்கும் மரியாதை, நல்வாழ்வை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

போயிங் 737 மேக்ஸ் விமானத்தை நியூசிலாந்து தடை செய்தது

  • எத்தியோப்பியாவில் நடைபெற்ற கொடிய விமான விபத்தைத் தொடர்ந்து, அதன் வான்வெளியில் இருந்து போயிங் 737 மேக்ஸ் விமானத்தை தரையிறங்கும்படி நியூசிலாந்து அறிவித்துள்ளது. நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAA) மற்ற கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த தற்காலிக இடைநீக்கத்தை அறிவித்துள்ளது.

200 கோல்டன் ஜூபிலி உதவித்தொகைகளை இந்தியா வழங்கியது

  • நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பல்வேறு இளங்கலை படிப்புகள் தொடர்வதற்கு நேபாள மாணவர்களுக்கான 200 கோல்டன் ஜூபிலி உதவித்தொகைகளை வழங்கியது. இந்த உதவித்தொகை நேபாளத்தில் மனித வள மேம்பாட்டை ஆதரிக்க இந்திய முயற்சியின் ஒரு பகுதியாகும். இமாலய தேசத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் மக்களுக்கும் இது உதவும்.

அறிவியல் செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என நாசா கூறியது

  • நாசா இந்த மாத இறுதியில் அதன் அனைத்து முதல் பெண் விண்வெளி நடை[ஸ்பேஸ்வாக்] குறித்து அறிவிக்கும் என்று சமீபத்தில் அறிவித்தது. செவ்வாய் கிரகத்தில் முதலில் கால் பதிக்கும் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று நாசா கூறியுள்ளது.

இந்தியாவின் புதிய தவளை 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது

  • கேரளாவின் வயநாட்டில் ஒரு மலையுச்சியில் இலைகுப்பைகளின் கீழ் வாழ்கிற ஒரு இரவு நேர நீர்நில உயிரினம், குள்ள விண்மீன் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குள்ள விண்மீன் தவளைக்கு, அஸ்ட்ரோபாத்திரஸ் குரிச்சியானா (குரிச்சியா பழங்குடி சமூகத்தை கவுரவிக்கும் வகையில்) இந்தப் பெயரை வைத்துள்ளனர். இது 2 செ.மீ நீளம் கொண்டது மற்றும் வெளிர் நீல புள்ளிகள் மற்றும் ஆரஞ்சு நிற தொடைகளைக் கொண்டு இருக்கும். இதன் மரபணுக்கள் குறைந்தது 60 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என மரபணு பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

வணிகம் & பொருளாதாரம்

ஆர்.பி.. OMO க்கள் வழியாக 12,500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது

  • இந்திய ரிசர்வ் வங்கி, ஆர்.பி.ஐ. திறந்த சந்தை நடவடிக்கைகளால் (OMOs) 12,500 கோடி ரூபாய்களை நாட்டில் முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது. OMOக்கள் பணச் சந்தை கருவிகள் ஆகும், இதன்மூலம் நாட்டில் உள்ள திரவ பணத்தை செலுத்தவும் எடுக்கவும் முடியும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து சபாஹார் துறைமுகம் வழியாக இந்தியா முதல் டி..ஆர்யைப் பெற்றது

  • ஐ.நா.வின் ‘சர்வதேச போக்குவரத்து வழித்தடம்’ [Transports Internationaux Routiers’ (TIR)] ஒப்பந்தத்தின் கீழ் முதல் கப்பல் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் சபாஹார் துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு வந்தது. ஜூன் 15, 2017 அன்று TIR ஒப்பந்தத்தில்(TIR கார்னெட்ஸ்ஸின் கீழ் சர்வதேச சரக்கு போக்குவரத்து தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுங்க ஒப்பந்தம்) இந்தியா இணைந்தது.

மாநாடுகள்

வெளியுறவுச் செயலாளர் கோகலே அமெரிக்காவின் செயலாளர் ஹேலை சந்தித்தார்

  • வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் ஹேலை வாஷிங்டன் டி.சி.யின் வெளியுறவு அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • மக்களவை சட்டத்தின் 14 வது பிரிவின் உட்பிரிவு (2) இன் கீழ் சட்டப்பூர்வ அறிவிப்புகளை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

EWSக்கான 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நியாயப்படுத்துகிறது

  • பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நியாயப்படுத்துகிறது, இது சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்தது.

டிஜிசிஏ போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தை தரையிறக்க முடிவு

  • சிவில் விமான போக்குவரத்தின் பொது இயக்குனர் டி.ஜி.சி.ஏ., உடனடியாக போயிங் 737 மாக்ஸ் 8 விமானத்தை தரையிறக்க முடிவு செய்துள்ளது. அடிஸ் அபாபாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து ஏற்பட்டு 157 பேர் இறந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நைஸ், வியன்னா மற்றும் லொகார்னோ உடன்படிக்கை அணுகுமுறைக்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்தது

  • நைஸ் ஒப்பந்தம் – குறிகள் பதிவு செய்வதற்கான நோக்கத்திற்காக சரக்குகள் மற்றும் சேவைகளின் ஒரு சர்வதேச வகைப்பாட்டை நிறுவுதல் பற்றியது.
  • வியன்னா ஒப்பந்தம் – குறிகளின் உருவக உறுப்புகளின் ஒரு சர்வதேச வகைப்பாட்டை நிறுவுதல்.
  • லொகார்னோ ஒப்பந்தம் – தொழில்துறை வடிவமைப்பிற்கான ஒரு சர்வதேச வகைப்பாட்டை நிறுவுதல்.

விளையாட்டு செய்திகள்

5வது SAFF மகளிர் சாம்பியன்ஷிப்

  • 5வது தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) மகளிர் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6-0 என்ற கணக்கில் மாலத்தீவை தோற்கடித்தது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

  • 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!