நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2,3 2018

0
662

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2,3 2018

முக்கியமான நாட்கள்

டிசம்பர் 2 – சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்

 • சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
 • ஆள்கடத்தலை ஒடுக்குதல் மற்றும் பிறர் விபச்சாரத்திற்குட்பட்டு சுரண்டப்படுவவதை தடுக்கவும்இந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • அடிமை முறையை அகற்றிய முதல் நாடு – 1807, பிரிட்டிஷ் அடிமை வியாபார ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்தியது.
 • அடிமைத்தனம் இன்னும் மவுரிடானியா போன்ற நாட்டில் சட்டபூர்வமாக உள்ளது.

டிசம்பர் 3 – சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

 • 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது. இதனையடுத்து, 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வையை, வெகுஜன மனநிலையிலிருந்து நீக்க வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம்.
 • 2018 தீம்: Empowering persons with disabilities and ensuring inclusiveness and equality

தேசிய செய்திகள்

மத்தியப் பிரதேசம்

போபால் விஷவாயு விபத்தின் 34 வது நினைவு தினம்

 • மத்தியப்பிரதேசத்தின் போபால் விஷவாயு விபத்தின் 34 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
 • இருபதாம் நூற்றாண்டின் கொடும் விபத்தான போபால் விஷவாயு கசிவு, உலகின் மோசமான பேரழிவு நிகழ்வுகளில் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது. 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் நள்ளிரவு நேரம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் எனப்படும் நச்சு வாயுவில் சிக்கி 25000 பேர் பலியாகிப் போனார்கள்.

புது தில்லி

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள் கொண்டாட்டம்

 • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த நாளான, டிசம்பர் 3, 2018 அன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அறிவியல் செய்திகள்

மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புறப்பட தயார்நிலை

 • மூன்று விண்வெளி பயணிகள், இரண்டு விண்வெளி வீரர்கள் (தங்கள் முதல் பயணம்) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆறரை மாத பணிக்கு புறப்பட தயார்நிலையில் உள்ளனர்.

வணிகம் & பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதாரம் 7.1 சதவீதமாக வளர்ந்துள்ளது

 • 2018-19ல் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம்1 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மாநாடுகள்

ஐநாவின் பருவநிலை மாநாடு

 • காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக் கழகம் (UNFCCC) கூட்டணி நாடுகளின் 24 வது கூட்டம் (COP-24), போலந்தின் கடோவைஸ் நகரில் தொடங்கியது.
 • தீம்‘One World One Sun One Grid’

ஆசியா பசிபிக் உச்சி மாநாடு-2018

 • நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் ஆசியா பசிபிக் உச்சி மாநாடு 2018 தொடங்கியது.
 • தீம் -“Addressing the Critical Challenges of Our Time: Interdependence, Mutual Prosperity, and Universal Values”.

கொள்கை ஆணையத்தின் 80 வது அமர்வு

 • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மும்பையில் உள்ள உலக சுங்க அமைப்புக்கான 80வது அமர்வு கூட்டத்தின் துவக்க விழாவில் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உரையாற்றினார்.

நியமனங்கள்

 • ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபராடர் – மெக்ஸிகோ ஜனாதிபதி
 • சுனில் அரோரா – புதிய தலைமை தேர்தல் ஆணையர் [23வது தலைமை தேர்தல் ஆணையர்(CEC)]
 • ஸ்ரீ ரவிந்திர குமார் வர்மா – மின்சாரத்துக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தொழில்நுட்ப உறுப்பினர்.

திட்டங்கள்

வடகிழக்கில் வாழ்வாதாரத் திட்டங்கள்

 • தேசிய பெண்கள் ஆணையம் (NCW), திறன் வளர்ச்சி மற்றும் சிறப்பு பயிற்சியின் மூலம் பெண்களுக்கு குறிப்பாக இளம் வயதினருக்கு, வடகிழக்கு வாழ்வாதார உதவித் திட்டங்களை ஆதரிக்கிறது. இது அவர்களது வாழ்கை வாழ சம்பாதிக்கவும் தனிநபர்களாக வாழவும் உதவுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைக்காக உலக வங்கி ரூ.14 லட்சம் கோடி ஒதுக்கீடு

 • பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைக்காக உலக வங்கி 2021-2025 ஆண்டுக்கு ரூ.14 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தது.
 • போலந்தின் கடோவைஸ் நகரில் ஐநாவின் பருவநிலை மாநாடு தொடங்கியது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

பாதுகாப்பு செய்திகள்

இராணுவப்பயிற்சி கோப் இந்தியா 2018

 • இந்தியாவில் நடத்தப்படும் IAF மற்றும் USAF க்கு இடையே நடைபெறும் இருதரப்பு கூட்டு பயிற்சிக்கான நான்காவது பதிப்பு இராணுவப்பயிற்சி கோப் இந்தியா
 • இந்த பயிற்சியின் நோக்கம் செயல்பாட்டு திறனை வழங்குவதோடு செயல்திறன் திறனை மேம்படுத்துவதற்கும் சிறந்த நடைமுறைகளை பரஸ்பர பரிமாற்றம் செய்வதாகும்.

விளையாட்டு செய்திகள்

டாடா மோட்டார்ஸ் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப்

 • கோண்டா, உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் டாடா மோட்டார்ஸ் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில், வினேஷ் போகத் 57 கிலோ பிரிவில் தேசிய பட்டத்தை வென்றார். சாக்ஷி மாலிக் 62 கிலோ பிரிவில் வென்றார்.

டாடா ஓபன் இந்தியா சர்வதேச சேலன்ஞ் 

 • மும்பையில் நடைபெறும் 11வது டாடா ஓபன் இந்தியா சர்வதேச சேலன்ஞ் பாட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் லக்ஷயா சென்.

புனே சர்வதேச மராத்தான்

 • எத்தியோப்பியாவின் அட்லாவிம் டெபே, 2 மணி நேரம் 17 நிமிடங்கள் 17 விநாடியில் முழு மராத்தானை கடந்து வென்றார். டிஷோம் கெடாசியூ இரண்டாவது மற்றும் பெக்கலி ஆசிபா மூன்றாவது இடம் பிடித்தனர்.
 • பெண்கள் முழு மராத்தான் போட்டியில் கென்யாவைச் சேர்ந்த பாஸ்காலியா செப்கோகெய் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் 27 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். எத்தியோப்பியாவின் பிலூ மெக்கோனென் மற்றும் ஃபெக்கிடி திலாஹூன் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களைக் பிடித்தனர்.

ஹாக்கி உலக கோப்பை

 • இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே புபனேஷ்வரில் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையின் இரண்டாவது குழு போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here