நடப்பு நிகழ்வுகள் – 30 ஏப்ரல் 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 30 ஏப்ரல் 2023
நடப்பு நிகழ்வுகள் – 30 ஏப்ரல் 2023

நடப்பு நிகழ்வுகள் – 30 ஏப்ரல் 2023

தேசிய செய்திகள்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கப்பற்படையின் 3வது கப்பல்இம்பால் சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டது.
  • இம்பால்இந்திய கடற்படையின் மூன்றாவது உள்நாட்டு தயாரிப்பிலேயே மற்றும் எதிரி நாடு ரேடர்க்குள் சிக்காமல் தப்பிக்கும் 15B வகுப்பு கப்பலானது இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயல்படத் திட்டமிடப்பட்டது.
  •  இது மசாகன் டாக் லிமிடெட் (MDL) மூலம் கட்டப்பட்டது, ‘ஆத்ம நிர்பர் பாரத்மற்றும்   மேக் இந்தியா திட்டத்தின் முயற்சிகளுக்கு இது பெருமை சேர்த்துள்ளது.

தேசிய நவீன கலைக்கூடம் ஆனது  ‘ஜன சக்தி-ஒரு கூட்டு சக்தி’ என்ற தலைப்பில் ஒரு கலைக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • ஜன சக்திஒரு கூட்டு சக்தி என்பது அகில இந்திய வானொலியில் (AIR) பிரதமர் நரேந்திர மோடியின்மன் கி பாத்என்ற பிரபலமான வானொலி நிகழ்ச்சியின் 100வது ஒளிபரப்பைக் கொண்டாடும் ஒரு கண்காட்சியாகும்.
  • இந்த ஜன சக்தி கண்காட்சியில் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்வது பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் கலைப்படைப்பு மற்றும் கருப்பொருள்களுடன் ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கும் என்றும் இது புதுமையான அணுகுமுறையை காட்சியாளர்களுக்கு வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்காட்சியானது 2023 மே 30-ஆம் தேதி வரை புது தில்லியில் உள்ளதேசிய நவீன கலைக்கூடத்தில்காட்சிப்படுத்தப்படும்.

சர்வதேச செய்திகள்

உலகின் முதல் ரோபோடிக் செக்இன் உதவியாளரை UAE அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலகின் முதல் ரோபோட்டிக்ஸ் அடிப்படையிலான விமான நிறுவனமானமானது  தனது சமீபத்திய கண்டுபிடிப்பானசாராஎன்ற உலகின் முதல் ரோபோடிக் செக்இன் உதவியாளரை வெளியிட்டது.
  • ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் முகங்களைசாராபொருத்தி, பயணிகளை சரிபார்த்து, சாமான்களை இறக்கும் பகுதிக்கு வழிகாட்டும் என கூறப்பட்டுள்ளது

மாநில மற்றும் யூனியன் பிரதேச செய்திகள்

தினை அனுபவ மையம் புதுடெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், NAFED நிர்வாக இயக்குநர் ஸ்ரீ ராஜ்பீர் சிங் உடன் இணைந்து தினை அனுபவ மையத்தை புதுதில்லியின்  டில்லி ஹாட்ல் தொடங்கினர்.
  • தினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொது மக்களிடையே அதை தத்தெடுப்பதை ஊக்குவிக்கவும் இந்த மையத்தின் நோக்கமாக அமையம் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

பயிர் சேதத்திற்கான மொத்த இழப்பீட்டில் 10 சதவீதமானது விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும்பஞ்சாப் முதல்வர் மான் அறிவிப்பு
  • இயற்கை பேரிடர் காரணமாக பயிர் சேதத்திற்கான மொத்த இழப்பீட்டில் 10 சதவீதம் இனி மாநிலத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு மானியமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் மான் அறிவித்துள்ளார்.
  • மே 1 – “தொழிலாளர் தினத்தைமுன்னிட்டு, பயிர்களை உற்பத்தி செய்ய உழைக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு இந்த முடிவு ஒரு பரிசாக அமையும் என்று பஞ்சாப் முதல்வர் மான் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேஷத்தில்முதல் விலங்கு சடலத்தை எரிக்கும் இயந்திரத்தைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஆதம்பூர் சாவ்னி பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆலை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) மற்றும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஆகியவற்றில் இயங்கும் என்று போபால் நிர்வாகம் தெரிவித்துள்ளது

சிந்தன் பனி திருவிழா-2023 

  • சிந்தன் பனி திருவிழா-2023 ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் சிந்தன் மைதானத்தில் 30 ஏப்ரல் அன்று நடைபெற உள்ளது.
  • கிஷ்த்வார் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் கலை கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கான அகாடமி (JKAACL) மற்றும் இந்திய ராணுவத்துடன் இணைந்து இப்பனித்திருவிழா  கொண்டாடப்பட்டுள்ளது.
  • சிந்தன் டாப் என்பது ஜம்மு பிரிவில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தையும் காஷ்மீர் பிரிவில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தையும் இணைக்கும் மிக உயரமான மலைப்பாதையாகும், இது கடல் மட்டத்திலிருந்து 12, 414 அடி உயரத்தில் உள்ளது.


நியமனம்

எல்ஐசியின் புதிய தலைவராக சித்தார்த்த மொகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மார்ச் 13, 2023 அன்று தனது பதவிக் காலத்தை முடித்த எம் ஆர் குமாருக்குப் பதிலாக சித்தார்த்த மொகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) தலைவராக சித்தார்த்த மொகந்தியை ஜூன் 29, 2024 வரை நியமித்துள்ளது, அதற்கு  பின், அவர் ஜூன் 7, 2025 வரை நிர்வாக இயக்குநராகவும்(CEO), தலைமைச் செயல் அதிகாரியாகவும்(MD) இருப்பார் என்று எல்ஐசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகமது பின் ரஷித் அல்மக்தூம்துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஷேக் முகமதுவின் மற்றொரு மகனுமான துபாய் மீடியா கவுன்சிலின் தலைவருமான  “முகமது பின் ரஷித் அல்மக்தூம்இரண்டாவது துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • துபாயின் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் அல்மக்தூம் தனது சகோதரரும் இதற்குமுன் நீண்டகாலமாக பணியாற்றிய துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம் 2021 இல் இறந்ததைத் தொடர்ந்து தனது மகன்களில் ஒருவரை துபாய் மன்னர், நாட்டின் துணை ஆட்சியாளராக(மன்னராக) அறிவித்துள்ளார்.

புத்தக வெளியீடுகள்

பிரதிபலிப்புகள்” (Reflection) என்ற புத்தகத்தை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் வெளியிட்டுள்ளார்.
  • பிரபல வங்கியாளர் ஸ்ரீ நாராயணன் வகுல் எழுதியபிரதிபலிப்புகள்என்ற புத்தகத்தை நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் வெளியிட்டுள்ளார்.
  • இந்தியாவில் நவீன வங்கியின் கட்டிடக் கலைஞராக பரவலாகக் கருதப்படும் ஸ்ரீ வாகுலின் இந்த புத்தகம், அவரது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் வியத்தகு கூறுகளையும், நகைச்சுவையான மற்றும் பெரும்பாலும் முக்கியமான நிகழ்வுகளையம் உள்ளடக்கியது

இந்திய கலாச்சார துறை அமைச்சகம் 12 காமிக் புத்தகத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.
  • பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள கருப்பொருள்கள் மற்றும் அதில் வரும் நபர்கள் அதாவது கதாபாத்திரங்கள்  அடிப்படையில் “12 பகுதிகளைக்கொண்ட காமிக் புத்தகத் தொடரை வெளியிட மத்திய கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இந்த சிறப்புத் திட்டத்தைஅமர் சித்ர கதா பப்பிளிகேஷன்ஸ்நிறுவனம் செயல்படுத்துகிறது,இந்த நிறுவனமானது தொடரை முதலில் ஆங்கிலத்தில் வெளியிடுகிறது, அதைத் தொடர்ந்து 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச சிற்ப தினம்
  • நமது உலகில் சிற்பம் வகிக்கும் முக்கிய பங்களிப்பை கொண்டாடவும் அதை சிறப்பிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இது 2000 ஆண்டுகளை கடந்தும் ஒரு முக்கியமான கலை வடிவமாகத் தொடர்கிறது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!