நடப்பு நிகழ்வுகள் – 28 ஏப்ரல் 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 28 ஏப்ரல் 2023
நடப்பு நிகழ்வுகள் – 28 ஏப்ரல் 2023
நடப்பு நிகழ்வுகள் – 28 ஏப்ரல் 2023

தேசிய செய்திகள்

தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை,2023-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை-2023 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது அணுகல், மலிவு, தரம் மற்றும் புதுமை போன்ற பொது சுகாதார நோக்கங்களை சந்திக்க மருத்துவ சாதனத் துறையின் ஒழுங்கான வளர்ச்சியை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறையை தற்போதைய 11 பில்லியன் டாலரில் இருந்து 50 பில்லியன் டாலராக உயர்த்த உதவும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நீர் மேலாண்மை மேம்பாடு குறித்த இந்தியாஹங்கேரி கூட்டு பணிக்குழு கூட்டம்–2023

 • இரு நாடுகளுக்கும் இடையேயான நீர் மேலாண்மைத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாஹங்கேரி கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
 • இந்த கூட்டத்தில் நீர் மேலாண்மையில் இந்தியாஹங்கேரி ஒத்துழைப்பின் எதிர்காலப் போக்கை வழிநடத்த 3 ஆண்டு வேலைத் திட்டம் கையெழுத்திடப்பட்டது.

“City Beauty Competition”வலைத்தளமானது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

 • நகரை அழகாகும் போட்டி “City Beauty Competition” வலைத்தளமானது https://citybeautycompetition.in தேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. நோக்கம்: அழகான, புதுமையான மற்றும் உள்ளடக்கிய பொது இடங்களை உருவாக்குவதற்கு நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் வார்டுகளின் மாற்ற முயற்சிகளை ஊக்குவிப்பதும் அங்கீகரிப்பதும் ஆகும்.
 • மதிப்பிடப்பட்ட நகரங்கள் முதலில் மாநில அளவில் பாராட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளீடுகள் தேசிய அளவிலான விருதுகளுக்கு பரிசீலிக்கப்படும்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், மற்றும் கலைத் துறைக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது

 • நாஷா முக்த் பாரத் அபியானை(NMBA)” மிகவும் பயனுள்ளதாகவும் பரவலாகவும் ஆக்குவதற்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், மற்றும் கலைத் துறைக்கு இடையே புதுடெல்லி புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) கையெழுதிப்பட்டுள்ளது.இதன் மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு இந்தியா அடைய ஊக்கம் பெறும் மற்றும் போதைப்பொருள் தேவையின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • நாஷா முக்த் பாரத் அபியான்(நம்ப) தற்போது நாட்டின் 372 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் தினைகளை ஊக்குவிக்க வேண்டும்என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • NITI ஆயோக், உணவில் தினைகளை ஊக்குவித்தல்: இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளது
 • இந்த அறிக்கையின் கருப்பொருள்:கம்புகளை மேம்படுத்துவதற்கான மாநில பணிகள் மற்றும் முயற்சிகள்,தினைகளை ஐசிடிஎஸ்ல் சேர்த்தல்,ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதுமையான நடைமுறைகளுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

G20 தலைமையின் கீழ் யூத்-20 (Y-20) உச்சி மாநாடு லடாக்கில் தொடங்கப்பட்டுள்ளது 

 • இளைஞர் மற்றும் விளையாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட G20 தலைமையின் கீழ் யூத்-20 (Y-20) உச்சி மாநாடு அதிகாரப்பூர்வமாக  லடாக்கில் தலைநகரமானலேவில்தொடங்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில்  30 வெவ்வேறு நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
 • இந்தத் திட்டங்கள், கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் இளைஞர்களுக்கான பரந்த தொழில் முனைவோர் வாய்ப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

மன் கி பாத்நிகழ்ச்சியின் 100 நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வகையில் ரூபாய்.100 நாணயம் மற்றும் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது

 • மன் கி பாத்நிகழ்ச்சியின் 100 நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வகையில் ரூபாய்.100 நாணயம் மற்றும் அஞ்சல்தலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் வெளியிடப்பட்டது.இந்த நாணயம் புழக்கத்தில் உள்ள மற்ற நாணயங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இது நான்கு உலோகங்களால் ஆனது மற்றும் 44 மிமீ விட்டம் மற்றும் 200 சீரான வரிசைகளைக் கொண்டுள்ளது. நாணயத்தின் மற்றொரு முகத்தில் மன் கி பாத்தின் 100வது அத்தியாயத்திற்கான லோகோ உள்ளது.

சோலார் டெகாத்லான்பில்ட் போட்டியில் ஷுன்யா அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது

 • அமெரிக்காவில் நடைப்பெற்ற  “சோலார் டெகாத்லான்பில்ட் போட்டியில் ஐஐடி பாம்பேயின் ஷுன்யா அணியானது  இரண்டாவது இடத்தைப் பிடித்தது.மும்பையின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் காற்றின் தர சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர்களின் புதுமையான ஜீரோஎனர்ஜி ஹவுஸ்(zero-energy house) வடிவமைக்கப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.
 • SHUNYA என்பது ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க உழைக்கும் ஐஐடி பாம்பேயின் மாணவர்களால் இயக்கப்படும் தொழில்நுட்பக் குழுவாகும். இதில் உலகெங்கிலும் உள்ள 32 அணிகளில் இந்தப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அணி இதுதான்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும்  ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (CEPA) கையிழுத்திட்டுள்ளது,

 • CEPA ஒப்பந்தம் ஆனது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், பன்முகப்படுத்தவும் ஒரு ஊக்கியாக செயல்படும் மற்றும்  சுங்கவரிகளை கணிசமாக நீக்குதல், வரி அல்லாத வர்த்தக தடைகளை குறைத்தல் மற்றும் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டில் வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
 • இந்த ஒப்பந்தம் ஆசியான், இந்தியா மற்றும் அரபு உலக நாடுகளுக்கு இடையே அதிகப் பொருளாதார இணைப்புக்கான ஊக்கியாக அமையும் என நம்பப்படுகிறது.
சர்வதேச செய்திகள்

அர்ஜென்டினா அமெரிக்க டாலருக்கு பதிலாக சீன யுவானில் வர்த்தகம் செய்ய முடிவு

 • அர்ஜென்டினா அமெரிக்க டாலர்களுக்குப் பதிலாக இனி சீன இறக்குமதிகளுக்கு, சீன பணமான யுவானில் செலுத்தும் என்று அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் செர்ஜியோ மாசா தெரிவித்துள்ளார்
 • நாட்டில்  குறைந்து வரும் டாலர் கையிருப்பில் இருந்து விடுபடுவதை இது நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக அமைகிறது. நிதி நெருக்கடி மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 100 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்கத்தின் விளைவுகளை மட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கவில் பென்சில்வேனியா மாகாணமானது  தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்திருக்கிறது.

 • அமெரிக்கவில் பென்சில்வேனியா மாகாணமானது  தீபாவளியை தனது அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பென்சில்வேனியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள், இதில் 34வது செனட்டோரியல் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பலர் உள்ளனர்,”
 • தீபாவளியை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அங்கீகரிப்பது நமது காமன்வெல்த்தின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை நிலைநிறுத்துகிறது மற்றும் கொண்டாடுகிறது.” என செனட்டர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
பொருளாதார செய்திகள் 

இந்தியகொரியா இருதரப்பு வர்த்தகம் 17% வளர்ச்சியடைந்து, 2022ல் $27.8 பில்லியன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • கொரியா வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்தின் (KOTRA) படி, இந்தியா மற்றும் கொரியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2022 இல் 17.3 சதவீதம் அதிகரித்து 27.8 பில்லியன் டாலராக இருந்ததுள்ளது.
 • இந்தியாவுக்கான கொரியாவின் ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரித்து 18.9 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 10.5 சதவீதம் அதிகரித்து 8.9 பில்லியன் டாலராகவும் உள்ளது மற்றும் தன மூலம் இரு நாடுகளின் வர்த்தக உறவும் மேற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நாசா முதன்முறையாக நிலவின் மண்ணில் இருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்துள்ளது.

 • நாசாவின் கார்போதெர்மல் ரெடக்ஷன் டெமான்ஸ்ட்ரேஷன் (CaRD) ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஆற்றல் செறிவூட்டியில் இருந்து வெப்பத்தை உருவகப்படுத்த உயர் ஆற்றல் கொண்ட லேசரைப் பயன்படுத்தி மற்றும் சியரா ஸ்பேஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய கார்போதெர்மல் ரியாக்டருக்குள் சந்திர மண் உருவகத்தை உருக்கி அதனுள்  ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்தனர்.
 • கார்போதெர்மல் குறைப்பு பூமியில் பல தசாப்தங்களாக சோலார் பேனல்கள், கார்பன் மோனாக்சைடு அல்லது டை ஆக்சைடு போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

கால்பந்து விளையாட்டு வீரரின் புனைப்பெயர் ஆனது பிரேசில் நாட்டின் அகராதியில் சேர்க்கப்பட்டது.

 • கால்பந்து விளையாட்டு வீரரான பீலேவின் பெயர் பிரேசிலின் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.”பீலேஎன்ற பெயருக்கு தனித்துவமானவர், ஒப்பிடமுடியாதவர் என்று பொருள் ஆகும்.
 • இவரின் இயற்பெயர் Edson Arantes do Nascimento  என்பதாகும். பீலே என்பது இவருக்கு மக்கள் கொடுக்கப்பட்ட புனைபெயராகும்.
முக்கிய தினம்

ஆட்டிசம் சூப்பர் அம்மா தினம் 

 • ஆட்டிசம் சூப்பர் அம்மா தினமானது 27 ஏப்ரல் அன்று அனுசரிக்கப்படுகிறது.
 • ஆட்டிஸ்டிக் நோயினால் அவதிப்படும் குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பை மதிப்பு கொடுப்பதற்கு மற்றும் பாராட்டுவதற்காக கொண்டாப்படுகிறது.
Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!