நடப்பு நிகழ்வுகள் – 23 மே 2023
தேசிய செய்திகள்
அல்-மொஹத் அல்-ஹிந்தி 2023 கூட்டு கடற்படை பயிற்சி ஆரம்பம்.
- இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த “அல்-மொஹத் அல்-ஹிந்தி 2023” என்ற கூட்டு கடற்படை பயிற்சியானது மே 21 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த பயிற்சிக்காக இந்திய மேற்கு கடற்படைக் கடற்படையின் முதன்மையான INS டர்காஷ் மற்றும் INS சுபத்ரா ஆகிய கப்பல்களானது சவூதி அரேபியாவின் “அல்-ஜுபைல்” துறைமுகத்திற்கு சென்றுள்ளது. இந்த பயிற்சியானது 2ஆவது பாதிப்பாகும், இதன் முதல் பதிப்பு 2021 இல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பெண் தொழிலாளர் மாநாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேரளாவில் தொடங்கி வைத்துள்ளார்.
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி திருவனந்தபுரத்தில் உள்ள BMS கேரள பிரிவு ஏற்பாடு செய்திருந்த “பெண் தொழிலாளர் மாநாட்டை” தொடங்கி வைத்துள்ளார்.
- மாநிலம் முழுவதும் உள்ள 33,000 அங்கன்வாடிகளில் 13 சதவீத மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடிய இடங்கள் நிரப்பப்படும் என்றும், கேரளாவில் உள்ள அங்கன்வாடிகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேலும் நவீனப்படுத்த வேண்டும் என்றும், இரானி தெரிவித்துள்ளார்.

ISO கொபோல்கோவின்(COPOLCO) 44 வது பதிப்பை இந்தியா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- சர்வதேச அமைப்பின் (ISO) நுகர்வோர் கொள்கைக்கான குழுவின் (COPOLCO) 44வது பதிப்பை மே 23 முதல் 26 வரை இந்தியா நடத்தவுள்ளது.
- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டக் கட்டமைப்புகள், நுகர்வோர் ஈடுபாட்டிற்கான சவால்கள் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான நுகர்வோரை மேம்படுத்துதல் ஆகியவை இந்த பதிப்பின் கருப்பொருளாகும்.
சர்வதேச செய்திகள்
விண்வெளிக்கு சென்ற சவூதி அரேபியாவின் முதல் பெண் என்ற பெருமையை “ரய்யானா பர்னாவி” பெற்றுள்ளார்.
- டிராகன் விண்கலத்தில், சவுதி அலி அல்கர்னி, அமெரிக்க தளபதி பெக்கி விட்சன் மற்றும் விமானி ஜான் ஷோஃப்னர் ஆகியோருடன் சவுதி அரேபியாவின் முதல் பெண் ராயனா பர்னாவி இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்றுள்ளார்.
- இந்த விண்கலத்துடன் கூடிய ஃ பால்கன்-9 ராக்கெட், நாசாவின் ஏவுகணை வளாகமான 39A-ல் இருந்து புறப்பட்டுள்ளது. ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளர் ராயனா பர்னாவி சவுதி அரேபிய அரசின் நிதியுதவியுடன் விண்வெளிக்கு சென்றுள்ளார்.
வங்கதேசம் – அமெரிக்கா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி ஆரம்பம்.
- வங்கதேசம் மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சியான ‘டைகர் ஷார்க் 40’ மே 21 அன்று வங்கதேசத்தின் சட்டோகிராமில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- இரு நாடுகளின் மூலோபாய திறன்களை அதிகரிப்பது மற்றும் பரஸ்பர தொழில்நுட்பம் பகிர்ந்து கொள்ளல், நடைமுறை கூட்டுறவை பெருக்குவது ஆகியவை இந்த பயிற்சிக்கான நோக்கமாகும்.
இங்கிலாந்து நகரின் முதல் தலைப்பாகை அணிந்த லார்ட் மேயர் என்ற அந்தஸ்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் பெற்றுள்ளார்.
- இங்கிலாந்தில் உள்ள கோவென்ட்ரியின் பிரிட்டிஷ் சீக்கிய கவுன்சிலர் ஜஸ்வந்த் சிங் பேர்டி, மத்திய இங்கிலாந்து நகரத்தின் “முதல் தலைப்பாகை அணிந்த லார்ட் மேயராக” ஆனதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
- பஞ்சாபில் பிறந்த இவர் 60 ஆண்டுகளுக்கு முன்பு கோவென்ட்ரிக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநில செய்திகள்
நாட்டிலேயே யாத்ரீகர்களுக்கு இலவச விமானப் பயணத்தை வழங்கும் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் அமைகிறது.
- முக்யமந்திரி தீர்த்த-தர்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் யாத்ரீகர்களுக்கு இலவச விமானப் பயணத்தை வழங்கும் நாட்டின் முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை “மத்திய பிரதேசம்” பெற்றுள்ளது.
- இத்திட்டத்தின் மூலம் 32 மூத்த குடிமக்களைக் கொண்ட முதல் குழுவானது விமானத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து பிரயாக்ராஜுக்குச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விருதுகள்
பிரதமர் மோடிக்கு பப்புவா கினியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
- உலகளாவிய தெற்கு பிரச்சனைகளில் தலைமை வகித்ததற்காகவும், பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக போராடியதற்காகவும் பிரதமர் மோடிக்கு பப்புவா கினியாவின் உயரிய சிவிலியன் விருதான “கிராண்ட் கம்பானியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் லோகோஹுவை(Grand Companion of the Order of Lokohuwai) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
- பப்புவா நியூ கினியாவின் கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே அவர்களால், பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தீவு நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சிறப்பும் இதில் அடங்கும்.
ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா
- ஜப்பானில் நடைப்பெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் விருதுகளை பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விருது | விருது பெற்றவர்களின் பெயர் | விருது பெற்ற படங்களின் பெயர் |
சிறந்த நடிகர் விருது | விஜய் | மாஸ்டர் |
சிறந்த படத்திற்கான விருது | – | சார்பட்டா பரம்பரை |
சிறந்த நடிகைக்கான விருது | கங்கனா ரணாவத் | தலைவி |
சிறந்த இசையமைப்பாளர்க்கான விருது | யுவன் சங்கர் ராஜா | மாநாடு |
சிறந்த இயக்குனருக்கான விருது | பா ரஞ்சித் | சார்பட்டா பரம்பரை |
பலாவ் நாட்டு ஜனாதிபதி பிரதமர் மோடிக்கு “எபகல்”(Ebakl) விருதை வழங்கியுள்ளார்.
- பலாவ் நாட்டின் குடியரசுத் தலைவர் பிரதமர் மோடிக்கு சுரங்கல் விப்ஸ் ஜூனியர் மே 22 அன்று எபாகல் (Ebakl) விருதை வழங்கியுள்ளார்.
- இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின்போது இந்த விருதை பலாவ் ஜனாதிபதி பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ் 2023 தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலம்.
- ஜப்பானின் யோகோஹாமாவில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான “கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ்” தடகளப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை “ஷைலி சிங்” வெண்கலம் வென்றுள்ளார்.
- அவர் தனது மூன்றாவது முயற்சியில் 6.65 மீ தூரம் பாய்ந்து இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.
இத்தாலிய ஓபனில் டேனியல் மெட்வெடேவ் தனது முதல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
- ரோமில் நடந்த இத்தாலிய ஓபன் 2023ல் ஹோல்கர் ரூனை தோற்கடித்து “டேனியல் மெட்வெடேவ்” தனது முதல் களிமண் மைதான மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
- மே 21ல் நடைப்பெற்ற இத்தாலி ஓபன் இறுதி போட்டியில் டேனியல் மெட்வெடேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனை தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
- ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்தியா அனுசரிக்கிறது.1991 ஆம் ஆண்டு இந்த நாளில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவை நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- பயங்கரவாதத்தின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.