நடப்பு நிகழ்வுகள் – 09 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 09 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 09 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 09 மே 2023

தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு
  • ராஜஸ்தானில் உள்ள நாகௌர் மாவட்டத்தில் உள்ள டெகானா நகராட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் இருப்பு, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில்  5.9 மில்லியன் டன்களை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
  • ராஜஸ்தானில் கிடைக்கும் லித்தியத்தின் அளவு, நாட்டின் 80 சதவீத தேவையை பூர்த்தி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் முதன்முறையாக லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் குறிப்பிடத்தக்க கனிம கண்டுபிடிப்பு ஆகும்,

முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையம் சண்டீகரில்  திறக்கப்பட்டுள்ளது
  • சண்டீகரில் இந்திய விமானப் படையின் பாரம்பரிய மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்தார்.கடந்தாண்டு சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கும் இந்திய விமானப்படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்த மையம் அமைக்கப்பட்டது.
  • IAF இன் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் உருவகமான இந்த மையம், கலைப்பொருட்கள், சுவரோவியங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது, இது அதன் தொடக்கத்திலிருந்து படையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.

வீட்டுவசதி அமைச்சகம் (MoHUA) மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) ‘மும்பைஅகமதாபாத் அதிவேக ரயில் நிலையப் பகுதி மேம்பாட்டிற்காக‘ (திட்டம்ஸ்மார்ட்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • 12 ரயில் நிலையங்களில் குஜராத்தில் உள்ள சபர்மதி, சூரத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள விரார் மற்றும் தானே உள்ளிட்ட நான்கு அதிவேக ரயில் நிலையங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டது.

மாநில செய்திகள்

டெல்லி மெட்ரோ QR குறியீடு அடிப்படையிலான காகித டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது 
  • டெல்லி மெட்ரோ அதன் அனைத்து வழி பயணத்திற்கான QR குறியீடு அடிப்படையிலான காகித டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பயணிகள் பயண அட்டைகள் மற்றும் டோக்கன்கள் தவிர டிக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம்.
  • மேலும்  க்யூஆர் அடிப்படையிலான காகித டிக்கெட்டுகள் மூலம் பயணிக்க அனைத்து நிலையங்களிலும் இரண்டு தானியங்கி கட்டண வசூல் (AFC) வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வுகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கரில் இரண்டு புத்த ஸ்தூபிகள் கண்டறியப்பட்டன
  • மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான பாறைக் கலை மற்றும் நவீன சமுதாயத்தின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதனை தொடர்ந்து, இரண்டு புத்த ஸ்தூபிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்த புத்த ஸ்தூபிகளில் ஒன்று 15 அடி உயரமும் மற்றொன்று 18 அடி உயரமும் உடையது. மேலும் இவை துறவற தலைவர்களின் சாம்பலைக் கொண்டிருக்க பயன்படுத்தப்பட்டது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் இரும்பால் ஆன 2 அடி உயரம் கொண்ட நங்கூரம் கண்டுபிடிப்பு
  • தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.அதன் முதல் கட்டப்பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்தது.
  • இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பணியில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றது.

அப்போது ஒரு முதுமக்கள் தாழி பக்கவாட்டில் இரும்பால் ஆன 2 அடி உயரம் கொண்ட நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரசின் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார் 

  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மே 1 அன்று தொடங்கியது. இந்த போட்டியில் மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் சபலென்காவும், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியும் மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
  • இந்நிலையில் இறுதிச் சுற்றில் சபலென்காவும் இகா ஸ்வியாடெக்கும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-3 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை சபலென்கா வென்றார்.

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023-ல் ஜெர்மி வெள்ளி வென்றார் 
  • தென் கொரியாவில் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆடவர் 67 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜெர்மி லால்ரின்னுங்கா தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து போட்டியின் ஸ்னாட்ச் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • காமன்வெல்த் கேம்ஸ் 2022 சாம்பியனான ஜெர்மி தனது மூன்றாவது முயற்சியின் மூலம் 141 கிலோ எடையை சமன் செய்து தனிப்பட்ட சாதனையை பதிவு செய்தார்.

தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் ட்ரிப்பிள் ஜம்பில் தேசிய சாதனை
  • கியூபாவின் ஹவானாவில் நடைபெற்றப்ரூபா டி கான்ஃப்ரான்டேசியன் தடகள மீட்போட்டியில் ட்ரிப்பிள் ஜம்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 21 வயதான தடகள வீரர் பிரவீன் சித்ரவேல் 17.37 மீட்டர் தூரம் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதனை இந்திய தடகள கூட்டமைப்பு முறைப்படி அங்கீகரிக்க வேண்டி உள்ளது.
  • இதன் மூலம் இந்தப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும் கடந்த 2016-ல் ரஞ்சித் 17.30 மீட்டர் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். தற்போது பிரவீன் அதை முறியடித்துள்ளார்.

முக்கிய தினம்

உலக தலசீமியா தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதியன்று உலக தலசீமியா தினம் அனுசரிக்கப்படுகிறது.தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் போராட்டத்தையும் இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போராடும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலும் இந்நாள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
  • உலக தலசீமியா தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “Be Aware. Share. Care: Strengthening Education to Bridge the Thalassaemia Care Gap.’’

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!