நடப்பு நிகழ்வுகள் – 02 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 02 மே 2023
தேசிய செய்திகள்
இலட்சத்தீவில் இந்தியாவின் G20 தலைமையின் கீழ் உலகலாவிய சுகாதாரம் பற்றிய “ அறிவியல் 20″ கூட்டம் நடைப்பெறுகிறது
இந்தியாவின் G20 தலைமையின் கீழ் உலகலாவிய சுகாதாரம் பற்றிய “ அறிவியல் 20″ கூட்டம் மே 1 மற்றும் 2 அன்று இலட்சத்தீவில் உள்ள பங்காரம் தீவில் நடைப்பெறுகிறது .
மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள் , சத்தான உணவுக்கான அதிக வளங்கள் , ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு பாதுகாப்பு , நிலையான உணவுப் பொருட்களுக்கான அதிக வாய்ப்புகள் ஆகியவை இதன் கருப்பொருளாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
NTPC மற்றும் NPCIL ஆகிய இரண்டு நிறுவனங்களும் அணுமின் நிலையங்களின் கூட்டு வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன .
முதற்கட்டமாகக JV நிறுவனம் இரண்டு அழுத்தப்பட்ட கனநீர் உலை (PHWR) திட்டங்களை உருவாக்கப்படுகிறது , சுட்கா மத்தியப் பிரதேச அணுமின் திட்டம் 2×700 மெகாவாட் மற்றும் மஹி பன்ஸ்வாரா ராஜஸ்தான் அணுமின் திட்டம் 4×700 மெகாவாட்டுகளை உருவாக்குதல், இது கடற்படை முறை அணுசக்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது .
இந்த துணை கூட்டு முயற்சி ஒப்பந்தமானது , NTPC Ltd மற்றும் NPCIL ஆகியவை அணுசக்தி திட்டங்களின் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய படியாக அமையும் எனல் எதிர்பார்க்கப்படுகிறது .
மாநில செய்திகள்
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான “ இந்தியாவின் முதல் மாதிரி மீள்குடியேற்ற காலனியானது ” ஒடிசாவில் உருவாக்க திட்டம் .
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான “ இந்தியாவின் முதல் மாதிரி மீள்குடியேற்ற காலனியானது ” ஒடிசாவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இந்த திட்டத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்அவர்களால் பகபதியாவில் காலனியின் முதல் மேம்பாட்டு கட்டத்திற்கு ரூ .22.5 கோடியை ஒப்புதல் அளித்தார் .
இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகள் , குடிநீர் , மின் இணைப்புகள் , சாலைகள் மற்றும் இதர வசதிகள் போன்றவற்றுக்கு இந்த அனுமதிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது .
நியமனம்
ரஜ்னீஷ் கர்நாடக் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமனம்
பேங்க் ஆஃப் இந்தியாவில் செயல் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன் ரஜ்னீஷ் கர்நாடக் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை பொது மேலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கு முன் இருந்த அதானு குமார் தாஸின் மூன்று ஆண்டு பதவிக்காலம் இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்த நிலையில் புதிய நிர்வாக இயக்குனராக ரஜ்னீஷ் கர்நாடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேங்க் ஆப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குநராக தேபாதத்தா சந்த் நியமனம் .
மூன்று ஆண்டுகளுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் , தலைமைச் செயல் அதிகாரியாகவும் தேபாதத்தா சந்த் (52) நியமிக்கப்பட்டுள்ளார் .
அவர் சஞ்சீவ் சாதாவின் பதவிக்காலமானது ஜூன் 30 2023 அன்று முடிவடைகிறதை தொடர்ந்து அவருக்குப் பின் தேபாதத்தா சந்த் பொறுப்பேற்ப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
சிஎஸ்ஐஆர் – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ( சிஇசிஆர்ஐ ) தலைமை இயக்குநராக “ கே . ரமேஷ் ” பொறுப்பேற்பு
காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ( சிஇசிஆர்ஐ ) தலைமை இயக்குநராக கே . ரமேஷ் சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார் .
ஆற்றல் சேமிப்பிற்கான பொருட்கள் , குறிப்பாக Li-ion பேட்டரிகள் மற்றும் பிற எதிர்கால ஆற்றல் சேமிப்பு சாதனங்களான Na-ion, Li-S, Li-Air மற்றும் அனைத்து திட நிலை பேட்டரிகள் ஆகியவற்றை மேம்படுத்தியது இவரின் சிறப்பு வாய்ந்த முயற்சிகள் ஆகும் .
தொல்லியல் ஆய்வு
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய தகவல் அடங்கிய செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு .
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய தகவல் அடங்கிய செப்பு பட்டயமானது தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சுவடித் திட்டப் பணிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் .
கட்டபொம்மனை கொலை செய்தது பற்றியும் கும்பினியர் ( ஆங்கிலேயர் ) விளம்பரம் செய்த வரலாற்று தகவலும் இந்த செப்பு பட்டயத்தை வைத்தவர் கும்பினியரின் ராணுவ படைத் தளபதி மேஜர் பானர் மேன் என்றும் 20-10-1799- ல் இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
புத்தக வெளியீடு
உத்தரகாண்டின் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தால் எழுதப்பட்ட “ மேரா ஜீவன் லக்ஷ்ய உத்தரகாண்டியத் ” என்ற புத்தகம் வெளியீடு .
ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹராஜ் அவர்களால் உத்தர்காண்டின் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தால் எழுதப்பட்ட “ மேரா ஜீவன் லக்ஷ்ய உத்தரகாண்டியத் ” புத்தகத்தை வெளியிட்டார் .
ஒவ்வொரு பள்ளியிலும் சிறுவயதிலிருந்தே உத்தரகாண்ட் மாநிலத்தை நம் குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் அதை பிரபலப்படுத்த வேண்டும் என அதை வெளியிட்ட ஜகத்குரு சங்கராச்சாரியார் கூறுகிறார் .
விளையாட்டு செய்திகள்
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் சீனர் டிங் லிரன்
ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை தோற்கடித்து டிங் லிரன் , முதல் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் சீனர் என்ற பெருமையை அடைகிறார் .
30 வயதாகும் டிங் , கஜகஸ்தானில் நடந்த உலக சதுரங்க போட்டியில் 14 முதல் – நிலை ஆட்டங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றார் .
டிங்கின் வெற்றி பெற்றதன் மூலம் அவர் உலக சதுரங்கப் போட்டியின் 17 வது வெற்றியாளராக ஆகிறார் .
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு 58 ஆண்டுகளுக்கு பின்பு தங்கம் .
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் மலேசியாவின் எட்டாவது நிலை வீரர்களான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யி ஜோடியை வீழ்த்தி ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர் .
1965 ஆம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கம் வென்றார் பின்பு ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பெற்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும் .
ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் தடகள மும்முறை தாண்டுதலில் இந்தியாவிற்கு தங்கம் .
ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் தடகள மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் “ அப்துல்லா அபுபக்கர் ” தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .
ஹிரோஷிமாவில் மிகியோ மெமோரியல் தடகள போட்டி நடைபெற்றது . இதில் ஆடவர் உலக தடகள மும்முறை தாண்டுதலில் அபுபக்கர் , 16 புள்ளி 31 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் .
முக்கிய தினம்
மகாராஷ்டிரா தினம்
1960 ஆம் ஆண்டு பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மராத்தி மொழி பேசும் மக்களை கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் உருவானதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி மகாராஷ்டிரா தினம் அல்லது “ மகாராஷ்டிரா திவாஸ் ” கொண்டாடப்பட்டு வருகிறது .
குஜராத் தினம்
குஜராத் மாநிலம் மே 1,1960 அன்று நிறுவப்பட்டது . இந்த நாளில் , பழைய பம்பாய் மாநிலத்திலிருத்து மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு , குஜராத் என்ற மாநிலம் உருவானது . குஜராத் பழங்காலத்திலிருந்தே ‘ மேற்கத்திய இந்தியாவின் நகை ‘ என்று அழைக்கப்பட்டது .
சர்வதேச தொழிலாளர் தினம்
தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி “ சர்வதேச தொழிலாளர் தினம் ” கொண்டாடப்படுகிறது .
இந்தியா , கியூபா , சீனா உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச தொழிலாளர் தினமானது கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .