CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு 2024 – வெளியீடு || முழு தகவல் இதோ!
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 2024 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம், தேர்வர்கள் தங்களின் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு:
2009-ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன் படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தகுதித் தேர்வை எழுதலாம். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இத்தேர்வை மீண்டும் எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள். முதலில் இந்த தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
CTET தகுதி விவரங்கள்:
பி. இ,பி.ஏ, பி.எஸ்.சி, எம்ஏ, எம்எஸ்சி ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், பி. எட் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் CTET தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
CTET தேர்வு:
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.
SSC MTS & Havaldar இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!
விண்ணப்ப கட்டணம்:
- General/OBC (NCL) – தாள் மட்டும் – I (அ) II – ரூ.1000/- – இரண்டு தாள்கள் – I & II – ரூ.1200/-
- SC/ST/Differently Abled Person – தாள் மட்டும் – I (அ) II – ரூ.500/- – இரண்டு தாள்கள் – I & II – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://ctet.nic.in/ என்ற இணைய முகவரி மூலம் இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் 03.11.2023 முதல் 23.11.2023 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வானது ஜனவரி 21,2024 ஆம் தேதி நடைபெற உள்ளது.