“தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்”…!! CSK கேப்டன் தோனி பகிரங்க அறிவிப்பு..!!
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 18-வது சீசன் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் நேற்றைய 52 லீக் போட்டியில் RCB மற்றும் CSK அணிகள் மோதின. இதில் டாஸை வென்ற CSK அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும், முதலில் பேட்டிங் செய்த RCB அணி 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் எடுத்தனர். இதில், அதிகபட்சமாக பெத்தேல் 55 ரன்களும், விராட் 62 ரன்களும் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய CSK அணிக்கு, நல்ல தொடக்கத்தை கொடுத்த ஆயுஷ் மாத்ரே 94 என்ற அதிகபட்ச ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வரிசையாக விக்கெட்கள் சரிய, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி 3 பந்துகளில் அவுட் ஆனார். அதன் பின், 211 என்ற இலக்கை மட்டுமே எட்டிய சென்னை அணி 9 வது முறையாக தோல்வியை சந்தித்து, நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
“அணு ஆயுதம் பயன்படுத்தி பதிலடித் தரப்படும்”…!! பாக். தூதரின் பேச்சால் சர்வதேச அளவில் பரபரப்பு..!!
இப்போட்டி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, “நான் ஒரு சில ஷாட்கள் ஆடியிருந்தால் எங்களுக்கு இருந்த அழுத்தம் குறைந்திருக்கும்; இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
























