மத்திய அரசின் NEERI ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR NEERI) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Associate- I பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
CSIR NEERI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Associate- I பதவிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Project Associate- I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Biotech / Microbiology / Life Science பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
- Project Associate- I பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Project Associate- I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் பணியாளர்கள் கூடுதல் தொகையாக HRA வழங்கப்படும்.
TNPSC Coaching Center Join Now
- Project Associate- I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு தேர்வு குழு பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் நேரடியாக ஆன்லைன் நேர்காணல் நடைபெறும். இதன் மூலம் இப்பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
CSIR NEERI விண்ணப்பிக்கும் முறை:
Project Associate- I பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் (15.05.2022) கால அவகாசம் முடிவதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.