CSIR மெட்ராஸ் ஆணையத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
Project Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
CSIR காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Associate கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் Senior Research Fellow வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.42,000/- || முழு விவரங்களுடன்!
CSIR வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Project Associate ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் recruitment@csircmc.res.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























