உயரப்போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!! அதற்கு காரணம் இதுதானா..!!
கடந்த சில நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதால் பங்குசந்தைகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே போர் நடைப்பெற்று வருவதால், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை 74.40 டாலராக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் ஏற்பட்டு அதிகரிக்க கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


























