புதிய ஹேர் ஸ்டைலுடன் தல தோனி – வைரலாகும் புகைப்படங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தோனி நியூ ஹேர் ஸ்டைல்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘கேப்டன் கூல்’, ‘தல தோனி’ என கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார். அவரது ரசிகர்கள் தல தோனியின் ஒவ்வொரு அசைவையும் மாஸ் வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே அவரது மகளுடன் இருக்கும் பல புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் புதிய ஹேர் ஸ்டைலுடன் செம எங் லுக்கில் தல தோனி இருக்கிறார்.
ஜூலை 31 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் (டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. ஐபிஎல் 2020 போட்டியில் கலந்து கொண்ட தோனி அதற்குபின் வேறெந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் எடுத்த ஒரு விளம்பர படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஃபரா கான் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.
TN Job “FB
Group” Join Now
அதில் தான் புதிய கெட்டப்பில் மாஸ் காட்டியுள்ளார் தல தோனி. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கேப்டன் தோனியை புதிய ஹேர் ஸ்டைலுடன் மைதானத்தில் காண்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.