ஏப்ரல் மாதம் முழுவதும் தடுப்பூசி செலுத்த வேண்டும் – மத்திய அரசு வலியுறுத்தல்!!
ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என இந்தியாவின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மாதம் முழுவதும் தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி துவங்கி முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள மத்திய அரசின் அறிக்கையின்படி ஜூலை மாதத்துக்குள் நாடு முழுவதும் உள்ள 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
அதன்படி ஏப்ரல் மாதம் முழுவதும் அனைத்து விடுமுறை நாட்களிலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதமானது, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தவிர தமிழகத்தில் மட்டும் இதுவரை 30.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்