கொரோனவை விரட்ட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி – இந்தியாவிற்கு அள்ளிக்கொடுத்த உலக வங்கி..!

1
கொரோனவை விரட்ட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி
கொரோனவை விரட்ட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி

கொரோனவை விரட்ட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி – இந்தியாவிற்கு அள்ளிக்கொடுத்த உலக வங்கி..!

உலகமெங்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் கொத்து கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகில் நாங்கள் தான் டாப் என பீத்திக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளும் திணறி வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் கதி அவ்வளவு தான்.

இந்தியாவில் இதுவரை 2000கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

உலக வங்கி நிதியுதவி:

உலக வங்கி கொரோனாவினை எதிர்கொள்ள 1 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 7,600 கோடி ரூபாயை இந்தியாவிற்காக ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் குழு திட்டங்களுக்கு $1.9 பில்லியன் டாலரினை 25 நாடுகளுக்கு உதவும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்களை செலுத்த தயாராக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பொருளாதார பாதிப்புகளை சரிசெய்யவும் உதவும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஆமா காலத்துக்கும் அவன்கிட்ட நாட்ட அடமானம் வச்சிட்டு.. வட்டிய மட்டுமே கட்டிகிட்டு அவனுக்கு அடிமையா இருக்க வச்சிருங்க எங்கள.. அப்ரம் அவன் என்ன சொன்னாலும் அதுக்கு அப்டியே தலைய ஆட்டிகிட்டு.. சும்மா நாங்க வல்லரசாக போரோம் நு சொல்லிகிட்டு திரியரது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!