பொதுமக்களின் வீட்டிற்கே தேடி வரும் கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி முடிவு!

0
பொதுமக்களின் வீட்டிற்கே தேடி வரும் கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி முடிவு!
பொதுமக்களின் வீட்டிற்கே தேடி வரும் கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி முடிவு!

பொதுமக்களின் வீட்டிற்கே தேடி வரும் கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி முடிவு!

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வந்ததை தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நோய் தொற்று பரவும் விகிதத்தை குறைக்க பொதுமக்கள் அதிகமாக கூடுவது தடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்த நிலையில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கிய நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நம்பிக்கை அளித்தனர்.

அனைத்து நாட்களும் கடைகள் இயங்க அனுமதி – வியாபாரிகள் கோரிக்கை!

அதனை தொடர்ந்து தமிழகத்தில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி பற்றாக்குறை வந்த நிலையில் மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. தற்போது 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் இருப்பிடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியதாவது, “மழை நீர் தேங்காமல் இருக்க உடனடி நடவடிக்கையாக மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 044-25384520, 46122300 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்” என கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!