வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள புதிய வழிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை!!

0
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள புதிய வழிமுறைகள் - மத்திய சுகாதாரத்துறை!!
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள புதிய வழிமுறைகள் - மத்திய சுகாதாரத்துறை!!
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள புதிய வழிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை!!

லேசான கொரோனா தொற்று மற்றும் அறிகுறிகள் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

புதிய வழிமுறைகள்:

கொரோனா உயிர் கொல்லி நோய் நாடு முழுவதும் வேகமாக பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே அரசு கொரோனோ குறித்த பல்வேறு தகவல்களை மக்களுக்கு வழங்கி போதுமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது மத்திய சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளானோர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் சூடான நீரை குடிக்க வேண்டும். தினமும் 4 முறை பாரசிட்டமால் 650 மி.கி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் மாவட்ட அளவில் கடும் நடவடிக்கைகள் – மத்திய உள்துறை அமைச்சகம்!

7   நாட்களுக்கு மேல் காய்ச்சல்,  இருமல் இருந்தால் மருத்துவமனைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். நோயாளிகள் வீட்டில் நல்ல காற்றோட்டமுள்ள அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் அவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நோயாளியும், பராமரிப்பாளரும் என்-95 முகக்கவசம் அணிவது அவசியம். இணை நோய்கள் இருப்பவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தாலோ அல்லது லேசான கொரோனா தொற்று இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும்.

‘இந்த’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை செய்த பிறகு 10 நாட்களுக்கு பின் காய்ச்சல் எதுவும் இல்லாமல் இருந்தால் அவர்கள் வெளியில் வரலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here