நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முழு ஊரடங்கு? 3வது அலை எச்சரிக்கை!

0
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முழு ஊரடங்கு? 3வது அலை எச்சரிக்கை!
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முழு ஊரடங்கு? 3வது அலை எச்சரிக்கை!
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முழு ஊரடங்கு? 3வது அலை எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் தற்போது தான் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரக்கூடிய சூழலில், 3 ஆம் அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றானது 2 ஆம் அலை, 3 ஆம் அலை என அடுக்கடுக்காக உயர்ந்து வருகிறது. இந்த ஒவ்வொரு அலையின் போதும் சில நாடுகள் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. அதாவது படைபலம், பொருள்பலம் என்று விளங்கும் வல்லரசு நாடுகள் கூட இந்த கொரோனா என்கிற நோய் தொற்று தாக்கத்தால் சற்று நிலை குலைந்துள்ளது. கண்ணுக்கு கூட தெரியாத நுண்ணுயிரி போன்றதொரு வைரஸ் முழு உலகத்தையும் இன்றளவும் ஆட்டிப்படைத்து வருகிறது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

T20 உலகக்கோப்பை: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் – தினேஷ் கார்த்திக் கோரிக்கை!

நோய் தொற்று துவங்கிய முதலாம் அலை காலத்தில் முழு ஊரடங்கு விதித்து சாமார்த்தியமாக தப்பித்த இந்தியா, 2 ஆம் அலையில் வசமாக சிக்கி கொண்டது. கண்ணை மூடி திறப்பதற்குள் இந்திய மாநிலங்களை ஆக்கிரமித்த கொரோனா, பல உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. இன்றும் கூட 2 ஆம் அலையில் இருந்து நம் நாடு மீண்டு வராத சூழலில், வரும் அக்டோபர் மாதத்தில் அதன் 3 ஆம் அலை உச்சம் தொடும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த 3 ஆம் அலையின் ஆரம்ப கட்டத்தில் இந்தியா இருப்பதாகவும், இது அதிகளவில் குழந்தைகளை பாதிக்கக்கூடும் எனும் கருத்துக்கள் சற்றே திகிலடைய செய்கிறது. எனினும் இந்த நோய் தொற்றை தடுக்க போராடி வரும் மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு நிபுணர்கள் சில முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளனர். மேலும் இந்த தாக்கத்தை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு என பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இணை நோய்கள் இருக்கும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆகியோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அந்த குழு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இப்படி இருக்க கொரோனா 3 ஆம் அலை முதல் 2 அலையை விட அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தாது எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இதுவரை ஏற்பட்ட நோய் தொற்றை மாநில அரசுகள் ஊரடங்கு விதித்து கட்டுக்குள் கொண்டு வந்தது. அதனால் கொரோனா 3 ஆவது அலையின் போதும் நாடு தழுவிய முடக்கம் விதிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் பாதிப்பு எண்ணிக்கை முந்தைய அலைகளை விட அதிகமாகும் என அரசுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அலை தாக்கத்தின் போது நாடு முழுவதும் ஒரே அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமா என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!