T20 உலகக்கோப்பை: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் – தினேஷ் கார்த்திக் கோரிக்கை!
டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டால், அவர் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டி:
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள 7-வது டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. குரூப்-2 பிரிவி்ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்திலேயே கோதாவில் ஈடுபடுகின்றன. அக்டோபர் 24-ம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
தமிழக நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் – அமைச்சர் உறுதி!
இது தொடர்பான கலந்துரையாடலில் பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில், இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட வேண்டும். அவரிடம் ஒரு தனித்துவம் இருப்பதாக நினைக்கிறேன், அவர் ஒரு ஸ்பெஷலான வீரர். இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டால் ஆட்டத்தில் பல அற்புதங்களை அவர் ஏற்படுத்துவார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். முக்கியமான போட்டிகளின் முடிவுகளை மாற்றக்கூடிய சுழற்பந்துவீச்சு திறன் அவரிடம் இருக்கிறது. அவர் அணியில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மேலும், உலகக் கோப்பையில் எந்த அணி வெற்றி பெறும் என நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் மோத வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஒரு இந்தியனாக நமது நாடு கோப்பையை வெல்ல வேண்டும். ஆனால் இந்தியாவுக்கு அடுத்து என்னுடைய அடுத்த சாய்ஸாக வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது. டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் நன்றாக விளையாடுகிறது. அதனால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.