டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 – கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பலத்த கட்டுப்பாடுகளுடன் தொடங்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஆண்டு கொரோனா பரவலால் தடைபட்டது. இதனை தொடர்ந்து அப்போட்டிகளை இந்த ஆண்டு நடத்த முடிவு செய்த ஒலிம்பிக் நிர்வாகம் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை போட்டிகளை நடத்துவதாக அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் முடிவுற்ற நிலையில் போட்டிகள் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தற்போது ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை – தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு!
அதாவது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா 4 ஆம் அலை பரவல் அதிகமடைந்து வந்ததை தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனிடையே நோய்த்தொற்று குறைந்து வந்ததால், ஒலிம்பிக் போட்டிக்கான அறிவிப்புகள் வெளியானது. ஆனால் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மீண்டுமாக கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்குகொள்ள இந்தியாவை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட வீரர்கள் தயாராக உள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் இந்திய வீரர்கள் அதிகம் பேர் அடங்கிய விளையாட்டு குழுவில், 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய 69 போட்டிகளிலும் இந்தியா பங்கேற்பது இது முதன்முறையாகும். இந்நிலையில் தான் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஒலிம்பிக் போட்டிகளின் தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். ஆனால் நோய் தொற்று பாதித்தவர் யார் என்றும், எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை ஒலிம்பிக் நிர்வாகம் வெளியிடவில்லை. இது தவிர அந்நபர் வெளிநாட்டை சேர்ந்தவர் எனவும் அவர் விளையாட்டு வீரர் இல்லை என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.