தமிழகத்தில் தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை – தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை - தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை - தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை – தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசின் அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெறுபவர்கள் தையல் இயந்திரம் வாங்க தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் உதவித்தொகையை அளிக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அரசின் உதவித்தொகை:

தமிழக அரசு, மக்களின் சுய தொழில்களை ஊக்குவிக்க வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகிறது. மேலும் கடனை திரும்ப செலுத்த கால அவகாசமும் வழங்குகிறது. தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அரசின் உதவித்தொகையும் கிடைக்கிறது. குறிப்பாக பெண்கள் சுய தொழிலை தொடங்க அரசு, இலவச தையல் பயிற்சி நிலையங்களை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பெண்கள் கைத்தொழிலை கற்றுக் கொண்டு தொழிலை தொடங்க அரசு ஊக்குவிக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? ஆணை வாபஸ்!

நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில் கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு தொழிலாளர்கள் அமைப்பு தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகையை வழங்குகிறது. மேலும் தமிழ்நாடு தொழிலாளர்கள் அமைப்பில் பதிவு செய்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தையல் இயந்திரம் வாங்குவதற்கும், அவர்கள் குழந்தைகள் உயர்கல்வியில் சேருவதற்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது ஏழை, எளிய மக்களுக்கு பேருதவியாகவும் தொடர்ந்து பணி செய்ய ஊக்கமளிக்க கூடியதாவும் இருந்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மோட்டார் நிறுவனங்கள், கடைகள், தோட்ட நிறுவனங்கள் & அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழிலாளியின் மாத வருமானம் ரூ.25,000குள் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு தமிழ்நாடு நலவாரிய அலுவலகத்தை 89397 82783 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!