நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? மத்திய அரசு திட்டம்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலுக்கு வருவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ தகவல் பற்றிய விபரங்களை இந்த பதிவில் காண்போம்.
முழு ஊரடங்கு:
நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் 70% அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களில் உள்ள நிலையைப் பொறுத்து ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்க அனுமதி அளித்துள்ளது.
மே 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
150 மாவட்டங்களில் பாதிப்புகள் 15%க்கும் அதிகமாக உள்ளதால் அங்கு தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில் முன்னதாக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 10 நாட்களாக தினசரி 3 லட்சத்துக்கும் அதிகமான புதிதாக தொற்று பாதித்தவர்கள் இருப்பதால், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கடந்த ஆண்டை போல் நாடு தழுவிய போராட்டத்தை அமல்படுத்துவதால் நாட்டில் பலத்த பொருளாதார தாக்கம் ஏற்படக்கூடும். இதனால் தான் மத்திய அரசு மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளது. முழு ஊரடங்கினால் வேலை இழப்புகள் ஏற்படும். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும். இதனால் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்தல் மத்திய அரசு விரும்பவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழு ஊரடங்கு பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். எனவே, கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம். மக்களுக்கு ஒளித்திரை வழியாக நிறைய அறிவுரைகள் கூறலாம்.
சாமானியர்கள் வாய்க்கு வந்த கருத்துக்களை சொல்லலாம்.ஆனால், அரசு திறமைமிக்க அறிவாளிகளின் ஆலோசனைப்படி தான் முடிவுகளை எடுக்கிறார்கள்.எனவே, அது முழு ஊரடங்குதான் உத்தமமானது என்றால் அதுவே சரியானதாக இருக்கும்.பொதுமக்கள் அரசின் அறிவுப்புகளையும் வழிகாட்டுதலையும் கடைப்பிடிப்பதே சாலச்சிறந்தது.