பட்டியலினத்தவர்கள் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய கட்டணம் கிடையாது – தமிழக அரசு அரசாணை!

0
பட்டியலினத்தவர்கள் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய கட்டணம் கிடையாது - தமிழக அரசு அரசாணை!
பட்டியலினத்தவர்கள் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய கட்டணம் கிடையாது - தமிழக அரசு அரசாணை!
பட்டியலினத்தவர்கள் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய கட்டணம் கிடையாது – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேரும் பட்டியல் இனத்தவர்களுக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

பதிவுக் கட்டணம்:

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசின் சார்பில் பத்திர பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேரும் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு தற்போது வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேருபவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் பட்டியல் இனத்தவர்களுக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!