TNPSC அரசியலமைப்புச்சாரா அமைப்புகள் பாடக்குறிப்புகள்

0

அரசியலமைப்புச்சாரா அமைப்புகள்

திட்டக்குழு

திட்டக்குழுவானது K.C நியோகி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மார்ச் 1950 இந்திய அரசின் நிர்வாக தீர்மானத்தின் (Executive Resolution) மூலம் உருவாக்கப்பட்டது. இது அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்லது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்லது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்ல.

பணிகள்

  • நாட்டில் உள்ள பொருள், மூலவளங்கள் மற்றும் மனிதவளங்களை அளவிடுதல் மற்றும் அவற்றை மேம்படுத்தும் வழிகளை ஆராய்தல்.
  • நாட்டின் வளங்களை பயனுள்ள முறையில் சரி சமமாக பயன் படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குதல்.
  • திட்டத்தின முன்னுரிமைப் பகுதிகளையும் அதனை பல்வேறு கட்டங்களில் செயல்படுத்துவதற்கான வரையறைகளையும் உருவாக்குதல்.
  • பொருளாதார மேம்பாட்டை தடை செய்யும் காரணிகளைக் கண்டறிந்து தெரிவித்தல்.
  • ஒவ்வொரு கட்டத்திலும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அமைப்புகளை நிர்ணயித்தல்.
  • ஒவ்வொரு காலகட்டத்திலும் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைப் பரிந்துரைத்தல்.
  • வேறு ஏதேனும் பணிகள் மத்திய அல்லது மாநில அரசுகளால் குறிப்பீடு செய்யப்பட்டால் அதனையும் மேற்கொள்ளுதல்.

அமைப்பு

  • இந்தியப் பிரதமர் திட்டக்குழுவின் தலைவராக இருப்பார்.
  • திட்டக்குழு முழுரேநமும் பணியாற்றும் துணைத்தலைவரைக் கொண்டுள்ளது. இவரே குழுவின் உண்மையான நிர்வாகத் தலைவராக விளங்குகிறார். அவரே ஐந்தாண்டுத் திட்ட வரைவு அறிக்கையை உருவாக்குவதற்கும் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கும் பொறுப்புடையவராக இருக்கிறார். இவர் கேபினெட்டால் நியமிக்கப்படுகிறார். எனினும் அவர் கேபினெட்டால் உறுப்பினர் இல்லை. அதன் கூட்டங்களில் வாக்குரிமை ஏதுமின்றி கலந்து கொள்ளலாம்.
  • மத்திய அரசின் சில அமைச்சர்க்ள அதன் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். நிதி அமைச்சரும்ää திட்ட அமைச்சரும் தம் பதவி வழி உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர்.
  • இக்குழுவில் நான்கு முதல் ஏழு வரையிலான முழுநேரம் பணியாற்றும் நிபுணர்களும் இடம் பெறுகின்றனர். இவர்கள் துணை அமைச்சர் அந்தஸ்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • குழுவில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினர்-செயலராக நியமிக்கப்படுகிறார்.

தேசிய வளர்ச்சிக் குழு

  • தேசிய வளர்ச்சிக் குழு ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டுத் திட்ட வரைவு அறிக்கையின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது.
  • இது அரசியலமைப்பாலோ, அல்லது பாராளுமன்றச் சட்டத்தாலோ உருவாக்கப்படாமல் நிர்வாகத் துறையின் தீர்மானத்தின் பேரில் உருவாக்கப்பட்டதாகும்.

அமைப்பு

  • இந்தியப் பிரதமர் இதன் தலைவராகச் செயல்படுவார்.
  • மத்திய அரசின் அனைத்து கேபினெட் அமைச்சர்களும் இதில் இடம் பெறுவர்.
  • யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் அல்லது ஆளுநர்களும் இடம் பெறுவர்.
  • திட்டக்குழு உறுப்பினர்களும் இதில் பங்கு பெறுவர்.
  • திட்டக்குழுவின் செயலரே தேசிய வளர்ச்சிக் குழுவின் செயலராகவும் திகழ்வார்.
  • நிர்வாக உதவி மற்றும் ஏனைய உதவிகளையும் அவர் வழங்குவார்.

குறிக்கோள்கள்

  • திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பெறுதல்.
  • தேசத்தின் வளம் மற்றும் முயற்சி ஆகியவற்றை திட்டத்திற்கு ஆதரவாகத் திரட்டுதல்.
  • எல்லா முக்கியமான துறைகளுக்கும் பொதுவான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குதல்.
  • நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விரைவான மற்றும் சரி சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்துதல்.

பணிகள்

  • தேசிய திட்டத்தை உருவாக்குதகற்கான வழிமுறைகளை உருவாக்கி வழங்குதல்
  • திட்டக்குழு தயாரித்த தேசியத் திட்டத்தை ஆய்வு செய்தல்.
  • திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான வளங்களை அளவிடுதல் மற்றும் அவற்றை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆய்வு செய்தல்.
  • திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவுத் திட்டம் முதலில் கேபினட்டிற்கு சமர்ப்பிக்கப்படும். கேபினட் ஒப்புதல் வழங்கியபின் தேசிய வளர்ச்சிக் குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின் திட்டவரைவு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும். பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியபின் அதிகார பூர்வ திட்டமாக வரைவுத் திட்டம் வெளியிடப்படும்.
  • இது ஆலோசனை கூறும் அமைப்பு மட்டுமே இதன் பரிந்துரைகள் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்தாது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசியலமைப்பின் படி அல்லாமல் பாராளுமன்றம் இயற்றிய சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பாகும். மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993ன் படி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராளுமன்றம் சட்டம் மூலம் உருவாக்கியது.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசியலமப்பு மற்றும் பன்னாட்டுச் சட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ள தனிநபர் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் காப்பதற்கு தனது பணியினைச் செய்து வருகின்றது.

அமைப்பு:

  • இது ஒரு தலைவரையும்ää நான்கு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இதன் தலைவராக இருப்பார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நடைமுறை அனுபவம் வாயந்த இருவர் என நால்வர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர்.
  • மேற்கண்ட முழுநேர உறுப்பினர்கள் தவிர பதவி வழி உறுப்பினர்களாக தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தேசிய தாம்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவர் மற்றும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் போன்றோர் இடம் பெறுவர்.

பதவி நியமனம்

மேற்கண்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர், பிரதமரைத் தலைவராகக் கொண்ட அறுவர் குழுவின் பரிந்துரையின்படி நியமனம் செய்கின்றார். அந்த அறுவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்,  தலைவராக பிரதமர், மக்களவைத்தலைவர், மாநிலங்களவைத் துணைத்தலைவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோராவார்.

பதவிக்காலம்

ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்பதவியில் 5 ஆண்டுகள் அல்லது 70 வயதுவரை பதவியில் இருப்பர். பதவிக்காலம் முடிந்தபின்னர் அவர்கள் மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ எந்த்ப பதவியும் வகிக்க முடியாது.

பதவி நீக்கம்

  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்யலாம்.
  • தன்னுடைய பணிக்காலத்தில் வெளியிடங்களில் ஊதியம் பெறும் பணியினைச் செய்தால்
  • உடல் அல்லது மனரீதியான காரணங்களால் பதவியைத் தொடர இயலாத நிலையில் இருந்தால்
  • தகுதியுள்ள நீதிமன்றத்தால் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என அறிவிக்கப்பட்டால்
  • ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் மேற்படி காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
  • இது தவிர தகுதியின்மை அல்லது தீய நடத்தை போன்ற காரணங்களின் அடிப்படையிலும் குடியரசுத் தலைவர் ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யலாம். எனினும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணையில் தகுதியின்மை அல்லது தீய நடத்தை நிரூபிக்கப்பட்டால் குடியரசுத் தலைவர் பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிப்பார்.

ஆணையத்தின் பணிகள்

  • அரசுப்பணியாளர் ஒருவர் மனித உரிமையை மீறினார் அல்லது மீறலைத் தடுக்கத் தவறினார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தானாக முன்வந்தோ அல்லது மனுத்தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையிலோ விசாரணை செய்தல்.
  • மனித உரிமை மீறல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலையிடுதல்.
  • சிறைகள் மற்றும் முறைப்படுத்தும் இடங்களை பார்வையிட்டு கைதிகளின் வாழ்வுநிலையை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குதல்.
  • அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்களில் கூறப்பட்டுள்ள மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை மறுபரிசீலனை செய்து பரிந்துரைகள் வழங்குதல்.
  • ஒப்பந்தங்கள், பன்னாட்டுச் சட்டங்களின் மனித உரிமை தொடர்பான விஷயங்கள் ஆய்வு செய்து அவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வகைமுறைகளைப் பரிந்துரை செய்தல்.
  • மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
  • மனித உரிமைகள் குறித்த விழிப்புணாவை மக்களுக்குப் பரப்புதல்.
  • மனித உரிமைகள் குறித்து பணிபுரியும் அரசு சாராத தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
  • மனித உரிமைகளை மேம்படுத்த வல்லது எனக்கருதுகின்ற எந்த விஷயத்தையும் ஆணையம் மேற்கொண்டு செயல்படுத்தலாம்.
  • மேற்கண்ட பணிகளை மாநில அளவிலும் செய்வதற்கு மாநில மனித உரிமை ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் விரைந்து நீதி கிடைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித உரிமை நீதிமன்றங்களும் அமைக்கப்படலாம்.

மத்திய கண்காணிப்பு ஆணையம்

  • இது மத்திய அரசாங்கத்தின் முக்கியமான ஊழல் தடுப்பு அமைப்பாகும்.
  • இது ஊழல் தடுப்பிற்கான சந்தானம் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1964ல் நிர்வாக தீர்மானத்தின் மூலம் மத்திய பாராளுமன்றம் இதற்கு சட்ட அந்தஸ்து வழங்கியது.
  • துவக்கத்தில் இது அரசியலமைப்பு ரீதியான ஆணையமோ அல்லது சட்ட ரீதியான ஆணையமோ அல்ல. மத்திய கண்காணிப்பு சட்டம் 2003ன் படி பாராளுமன்றம் இதற்கு சட்ட அந்தஸ்து வழங்கியது.

அமைப்பு

  • இது ஒரு தலைமை கண்காணிப்பு ஆணையர் மற்றும் இரண்டு கண்காணிப்பு ஆணையர்களை கொண்டுள்ளது.
  • இவர்கள் பிரதம மந்திரியின் தலைமையிலான உள்துறை மத்திய மந்திரி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூன்று நபர் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் தன் கையொப்பமிட்ட மற்றும் முத்திரையிட்ட ஆணையால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • இவர்கள் இப்பதவியில் 4 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை பதவியில் இருப்பர். பதவிக்காலம் முடிந்தபின்னர் அவர்கள் மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ எந்தப் பதவியும் வகிக்க முடியாது.
  • தகாத நடத்தையின் காரணமாகவும் பதவி நீக்கம் செய்யப்படலாம். அவ்வாறு பதவி நீக்குவது குறித்து உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்ப(சுநகநசநnஉந) வேண்டும். உச்சநீதிமன்றம் தக்க விசாரணை நடத்திää முடிவில் அவரை பணிநீக்கம் செய்ய அறிக்கை அனுப்பினால் குடியரசுத்தலைவர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

பணிகள் – மத்திய அரசாங்கத்தினால் இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அரசு ஊழியர்களை விசாரிப்பது.

லோக்பால்

  • நிர்வாக சீர்த்திருத்த ஆணையம் Administrative Reforms Commission (ARC) (1966–70) மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா எனும் இரண்டு சிறப்பு நிறுவனங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இவை ஸ்காண்டிநேவிய நாடுகளிலுள்ள ஓம்புட்ஸ்மென் (Ombudsman) அமைப்பைப் போன்று அமைக்கப்படும்.
  • மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான புகார்களை மத்திய அளவில் லோக்பாலும் மாநில அளவில் லோக்ஆயுக்தாவும் விசாரிக்கும்.
  • லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் கீழ்க்காணும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என நிர்வாக சீர்த்திருத்த ஆணையம் Administrative Reforms Commission (ARC) பரிந்துரைத்தது.
  • அவை சுதந்திரமாக, பாரபட்சமற்று செயல்பட வேண்டும்.
  • அவற்றின் விசாரணையில் நீதித்துறை தலையிடக்கூடாது.
  • நிர்வாக சீர்திருத்த ஆணையம் Administrative Reforms Commission (ARC பரிந்துரைகளை ஏற்று கொண்ட அரசாங்கம் அதை சட்டமாக்க இதுவரை 8 முறை முயற்சி செய்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது சட்டமாகவில்லை.

லோக் ஆயுக்தா

  • இது முதல்முதலில் 1971ல் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டது. ஒரிசா இதற்கான சட்டத்தை 1970ல் இயற்றினாலும் 1983ல் அமைக்கப்பட்டது.
  • இது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.

நியமனம்

லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அம்மாநிலத்தின் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். பெரும்பாலானமாநிலங்களில் நியமனத்தின் போது அம்மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும் கலந்தாலோசிக்கப்படுவார்கள்.

பதவிக்காலம்

  • லோக் ஆயுக்தாவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.
  • பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர்கள் மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ எந்தப் பதவியும் வகிக்க முடியாது.

 நிதி ஆயோக்

‘நிதி ஆயோக்’ அமைப்பு பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்.

  • இந்தியாவின் பிரதமர் இதன் தலைவர்
  • இதன் நிர்வாகக் குழு அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், சட்டமன்றப் பேரவையுடன் அமைந்த மத்திய ஆட்சிப் பகுதிகளின் முதலமைச்சர்கள் மற்றும் பிற மத்திய ஆட்சிப்பகுதிகளின் துணைநிலை ஆளுநர்கள் ஆகியோரைக் கொண்டது.
  • ஒரு மாநிலத்திற்கு அதிகமான மாநிலங்களை அல்லது ஒரு பிரதேசத்தைப் பாதிக்கக் கூடிய குறிப்பான பிரச்சனைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்காக இவை உருவாக்கப்படுகின்றன. இந்த மண்டலக் குழுக்களின் முதல்வர்கள்இ மத்திய ஆட்சிப் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் ஆகியோரைக் கொண்டவையாக இக்குழுக்கள் இருக்கும். இவை நிதி ஆயோக்கின் தலைவர் அல்லது அவரது சார்பில் நியமிக்கப்படும் ஒருவரால் தலைமை தாங்கப்படும்.
  • பொருத்தமான (பல்வேறு துறைகள் சார்ந்த) ஞானமுடைய நிபுணர்கள்இ சிறைத் துறை வல்லுநர்கள் மற்றும் நடைமுறைப்படுத்துவோர், பிரதமரால் சிறப்பு அழைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு அழைக்கப்படுவார்கள்.
  • பிரதமரைத் தலைவராகக் கொண்டிருப்பதுடன் கூடுதலாக முழு நேர அமைப்பு சார்ந்தசட்டகம் பின்வருவோரை உள்ளடக்கியதாக அமையும்.

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PDF Download

TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  -ல் சேர கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!