இனி அனைவருக்கும் கட்டணமின்றி காப்பீடு வழங்கும் அரசு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

0

இன்றைய காலகட்டத்தில் தனிநபர் ஒருவர் தனக்கான ஆயுள் அல்லது விபத்துக் காப்பீடு போன்றவற்றை பெற்றிடும் போது பெருமளவு தொகையை செலவு செய்திட வேண்டி இருக்கிறது. எனவே தமிழக அரசு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 முன்னணி வங்கிகளுடன் புரிதல் ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் “அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீடு தொகையாக ரூ.1 கோடி நிதியும், விபத்தில் இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமண செலவுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது”.

Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

இதை தொடர்ந்து, “விபத்து காரணமாக இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தில் கல்லூரியில் பயிலும் மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வரையும், ஊழியர் பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்”. இச்சலுகைகளை பெற “பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 அரசு வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் அரசு ஊழியர்கள் தங்களது ஊதிய கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எவ்வித கட்டணமுமின்றி இந்த சலுகைகள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!