தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் – சி.ஐ.ஐ சர்வே முடிவுகள்!!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் - சி.ஐ.ஐ சர்வே முடிவுகள்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் - சி.ஐ.ஐ சர்வே முடிவுகள்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் – சி.ஐ.ஐ சர்வே முடிவுகள்!!

இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை கிளை, அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை கிளை மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து சர்வே ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு – முக்கிய அறிவிப்பு!!

சர்வே முடிவுகள்:

கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களிடையே சர்வே எடுக்கப்பட்டது. அதன்படி, 710 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அலுவலர்கள் இந்த சர்வேயில் கலந்து கொண்டனர். பாதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் தொழிலாளர் மற்றும் உற்பத்தி பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று 75% கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இல்லாமல் உற்பத்தி பாதிக்கப்படும் என்று 60% கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. உற்பத்தி சேவை மற்றும் சேவை பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று 68% கருத்துக்கள் வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

சி.ஐ.ஐ தலைவர் கருத்து:

இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை கிளையின் தலைவர் அவர்கள், தொழில், வணிகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முறையான சுகாதார, பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். சமூக கூட்டங்களை அனுமதிக்க கூடாது. பணியாளர்களிடையே சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியும் நடைமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி திருவிழாவை நடத்துவதற்கும் நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் அறிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here