தமிழக அரசில் ரூ.12,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Security Guard, Multi Purpose Helper பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Security Guard, Multi Purpose Helper பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Security Guard – 1 பணியிடம்
- Multipurpose Helper – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Security Guard – விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Multipurpose Helper – விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.12,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
- Security Guard – ரூ.10,000/-
- Multipurpose Helper – ரூ.12,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























