சென்னையில் இன்று பேருந்து இயக்கம் குறைப்பு – மிக்ஜாம் புயல் காரணமா?

0
சென்னையில் இன்று பேருந்து இயக்கம் குறைப்பு - மிக்ஜாம் புயல் காரணமா?
சென்னையில் இன்று பேருந்து இயக்கம் குறைப்பு - மிக்ஜாம் புயல் காரணமா?
சென்னையில் இன்று பேருந்து இயக்கம் குறைப்பு – மிக்ஜாம் புயல் காரணமா?

சென்னையில் இன்று இயக்கப்படும் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயக்கம்:

வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகரத்தின் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது. மேலும் இன்று அதிக கன மழை இருக்கும் என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற அனைத்து தரப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

144 ஊரடங்கு உத்தரவு அமல் – பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இன்று 320 மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் ஒரு நாளில் சராசரியாக 2600 பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!