144 ஊரடங்கு உத்தரவு அமல் – பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

0
144 ஊரடங்கு உத்தரவு அமல் - பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!
144 ஊரடங்கு உத்தரவு அமல் - பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!
144 ஊரடங்கு உத்தரவு அமல் – பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

144 தடை உத்தரவு:

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் தற்போது சென்னையிலிருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – பொதுமக்களே உஷார்!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் காரணமின்றி வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!