வேலையை நிறுத்த சந்திரகலா போட்ட திட்டம், தமிழின் முடிவு என்ன? “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் ப்ரோமோ!

0
வேலையை நிறுத்த சந்திரகலா போட்ட திட்டம், தமிழின் முடிவு என்ன?
வேலையை நிறுத்த சந்திரகலா போட்ட திட்டம், தமிழின் முடிவு என்ன? "தமிழும் சரஸ்வதியும்" சீரியல் ப்ரோமோ!
வேலையை நிறுத்த சந்திரகலா போட்ட திட்டம், தமிழின் முடிவு என்ன? “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் ப்ரோமோ!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் தமிழ் பேக்ட்ரியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என ஓய்வில்லாமல் உழைக்க முடிவு செய்கிறார். வேலையை பாதியிலேயே நிறுத்த சந்திரகலா திட்டமிட அதனால் தமிழ் திணறப் போகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் கோதையின் தொழில் முடிந்துவிடக் கூடாது என்பதால் கஷ்டப்பட்டு போராடி ஆர்டர் வாங்கி இருக்கிறார். அதற்காக இரவு பகலாக வேலை செய்து காண்ட்ராக்ட் வாங்க வேண்டும் என தமிழிற்கு புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதற்காக பேக்ட்ரி ஊழியர்களிடம் பேசி தமிழ் வேலையை தொடங்குகிறார். கார்த்திக் முதலில் இது முடியாத விஷயம் என சொன்னாலும் தமிழின் வேலையை பார்த்து அவருக்கு நம்பிக்கை வருகிறது.

Exams Daily Mobile App Download

தமிழ், நமச்சி ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்குகின்றனர். சரஸ்வதி அவர்களுக்கு தேவையான காபி ஸ்னாக்ஸ் போன்றவற்றை கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அதனால் வேலை சுலபமாக நடக்கிறது. தமிழ் வெற்றி பெறக் கூடாது என்பதால் சந்திரகலா புதிதாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதில் பேக்ட்ரியில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து அவருக்கு பணம் கொடுத்து கரண்ட் கட் செய்ய சொல்லி சொல்கிறார். அவரும் பணத்திற்காக அதை செய்ய ஒப்புக் கொள்கிறார்.

TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 8% சதவீத ஊழியர்கள் அலுவலகம் வர உத்தரவு!

தமிழ், நமச்சி மற்றும் ஊழியர்கள் கடினமாக முயற்சி செய்து டாஸ்கை முடிக்க வேண்டும் என போராடி கொண்டிருக்க சந்திரகலாவிடம் பணம் வாங்கிய நபர் மெயின் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கே ப்யூஸ் ஐ பிடுங்கி விடுகிறார். அதனால் கரண்ட் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் வேலை எல்லாம் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. தமிழ் என்ன ஆனது என கேட்க பியூஸ் போயிருச்சு நாளைக்கு தான் வேலை செய்ய முடியும் என அந்த ஊழியர் சொல்ல தமிழிற்கு என்ன செய்வது என தெரியவில்லை. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!