தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி!
தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் செப். 2 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் Telegram செயலிக்கு தடையா?? சற்று முன் வெளியான முக்கிய தகவல்!!
இந்நிலையில் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.


























