
Champions Trophy 2025: நாளை நடைபெறுகிறது IND vs NZ இறுதி போட்டி …!! வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் தெரியுமா..?
சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நாளை நடைபெறும் இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…விரைவில் அறிமுகமாகும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
அதாவது, இந்தியாவும், நியூசிலாந்தும் 25 வருடங்களுக்கு பின் ஒயிட்-பால் டோர்னமெண்ட் இறுதி போட்டியில் மோதிக்கொள்கின்றன என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போட்டியானது நாளை (09-03-25) இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மேலும், 1975 முதல் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 119 போட்டிகள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி 61 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


























