பாகிஸ்தானியர்கள் உடனே இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்.. மத்திய அரசு விதித்த அதிரடி உத்தரவு..!!
காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று (23-04-2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமித்ஷா, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து இரண்டு மணி நேர விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியது, “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது என்றும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு இனி விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என்று கூறினார். மேலும், தற்போது விசா பெற்றுள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், இந்திய தூதரகத்தில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளின் எண்ணிக்கையை 55-ல் இருந்து 30 ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்”.
























