TNPSC மத்திய மாநில அரசுகளின் உறவுகள் பாடக்குறிப்புகள்

0

மத்திய மாநில அரசுகளின் உறவுகள்

கூட்டாட்சியின் அடிப்படையாக மத்திய மாநில அரசுகளின் உறவுகள் பற்றி அரசியமைப்பில் பகுதி XI மற்றும் XII ல் தலைமை, சட்டம், ஆளுமை மற்றும் நிதி உறவுகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டமியற்றும் உறவுகள்

  • 99 இனங்கள் கொண்ட மத்தியப் பட்டியலே மூன்று பட்டியல்களிலும் மிகப்பெரிய பட்டியல் ஆகும். இதில் உள்ள சில முக்கியமான இனப் பாதுகாப்பு, ரயில்வே, அஞ்சல் மற்றும் தந்தி, வருமான வரி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி, நாடு முழுவதும் மத்திய பட்டியலில் உள்ள இனங்களில் சட்டம் பிறப்பிப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
  • மாநிலப்பட்டியல் 66 இனங்களை உள்ளடக்கியது. இந்த பட்டியலில் உள்ள சில முக்கியமான இடங்களாவன: மாநிலத்தினுள் நடைபெறும் தொழிலும் வணிகமும், காவல், மீன்பிடிப்பு, காடுகள் சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும். மாநில சட்டசபை இந்த பட்டியலில் உள்ள இனங்கள் தொடர்பாக சட்டமியற்றுகிறது.
  • பொதுப்பட்டியல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலன்களைக் கொண்ட 47 இனங்களை உள்ளடக்கியது. இந்த பட்டியலில் உள்ள சில முக்கிய இனங்கள் பத்திரக் கட்டணம், மருந்து மற்றும் நச்சுகள், மின்சாரம், செய்தித்தாள்கள் ஆகும். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபைகள் சேர்ந்து தான் இந்த இனங்களில் சட்டமியற்றும். ஒருவேளை சட்டம் அமைப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசு எடுக்கும் முடிவிற்கே அதிக அதிகாரம் உண்டு. இந்த மூன்று பட்டியல்களிலும் வராத இனங்களில் சட்டமியற்றும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு தான் உள்ளது.
  • சில சந்தர்ப்பங்களில் மாநிலப் பட்டியலில் உள்ள இனங்களுக்கு கூட நாடாளுமன்றம் சட்டமியற்ற முடியும்.

ஆளுகை உறவுகள்

  • மாநிலங்களின செயலாட்சி அதிகாரம் நாடாளுமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு இணங்கி கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். மத்திய செயலாட்சி, தேவைப்படும்போது மாநிலங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கலாம். தேசிய மற்றும் ராணுவ முக்கியதுவத்திற்காகவும் ரயில்வேயின் பாதுகாப்பிற்காகவும் தொலைத்தொடர்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்பிற்காகவும் மத்திய அரசு மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கலாம். அதன்படி மாநில அரசுகள் இணங்க வேண்டும். இவற்றிற்கும் மேலாக மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பிரச்சினையில் நாடாளுமன்றம்; மட்டுமே முடிவெடுக்க முடியும். மேலும் இது ஜனாதிபதிக்கு மாநிலங்களுக்கிடைப்பட்ட பிரச்சினையில் ஆரோசனை வழங்க இடைமாநிலக் குழு அமைப்பதற்கு வழிவகுக்கிறது.
  • மாநில அரசுகள் கூட மாநிலப் பட்டியலில் உள்ள சில ஆளுகைப் பணிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மத்திய அரசிடம் ஒப்படைக்க முடியும்.
  • இந்திய அரசியலமைப்பு ஆளுகை முறையில் ஒரு சீர்மையை உறுதிப்படுத்துவதற்காக சில சிறப்பு அம்சங்களைப் பெற்றுள்ளது.
  • இவை அனைத்திந்தியப் பணியான IAS மற்றும் IPS உருவாக்கி மாநிலங்களில் முக்கியமான ஆளுகை நிலைகளில் அமர்த்துவதை உள்ளடக்கியது. அனைத்திந்தியப் பணி அலுவர்களின் இருப்பு மற்றும் மாநில அரசின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கு வழிசெய்கிறது. அனைத்திந்தியப் பணியின் உறுப்பினர்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். மாநில அரசுகளால் மத்திய அரசின் அனுமதியின்றி இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவியலாது.
  • இந்திய அரசியலமைப்பு ராஜ்ய சபாவின் பரிந்துரையின்படி நாடாளுமன்ற புதிய அனைத்திந்தியப் பணி உருவாக்கவும் அதிகாரமளித்துள்ளது.
  • மத்திய அரசு சில தருணங்களில் மாநில அரசுகளின் சுய ஆட்சி உரிமையில் தலையிடுவதற்கு அதிக அளவிலான அதிகாரம் பெற்றுள்ளது. உதாரணமாக மத்திய காவல் படை மற்றும் ராணுவம் ஆகியவை மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி மத்திய அரசால் மாநிலங்களில் நியமிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களில் CRP மற்றும் PSF ஆகியவை மாநிலங்களின் விருப்பமின்றியே மாநிலங்களில் நியமிக்கப்படுகின்றன.

நிதி தொடர்பான உறவுகள்

  • பண வளங்களைப் பகிர்ந்தளித்தல் மாநில அரசுகளுடனான மத்திய அரசின் உறவு ஆராயக்கூடியது. அரசியலமைப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தனித்தனி வருமான வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய பட்டியலிலுள்ள இனங்களுக்கு நாடாளுமன்றம் வரிகள் விதிக்கலாம். மாநிலப்பட்டியலிலுள்ள இனங்களுக்கு மாநில அரசு வரிகள் விதிக்கலாம். மாநிலங்களுக்கிடையிலான அடித்தளங்களைக் கொண்ட வரிகள் ஒட்டு மொத்தமாக மத்திய அரசால் விதிக்கப்படுகின்றன. அவற்றில் உள்ளுர் காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை மாநில அரசால் விதிக்கப்படுகின்றன.
  • மத்திய பட்டியல் கீழ்வரும் வரிகளைக் கொண்டது.
  • பத்திரப்பதிவு வரி மற்றும் மருத்துவ மற்றும் கழிவுப் பொருள்கள் மீதான உற்பத்தி வரி போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு மாநில அரசினால் வசுலிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கும் வரிகள்.
  • ரயில்வே கடல் வழி அல்லது வான்வழிப் போக்குவரவு வரிகள் போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வசு10லிக்கப்பட்டு ஆனால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரிகள்.
  • உற்பத்தி வரி போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வசுலிக்கப்பட்டு நாடாளுமன்ற சட்டத்தின்படி  மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் வரி.
  • இறக்குமதி வரி மற்றும் வருமான வரி போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வசுலிக்கப்பட்டு அவர்களாலேயே வைத்துக் கொள்ளப்படும் வரி.
  • வேளாண்மை வரி தவிர்த்து மற்ற வரிகள் மத்திய அரசினால் விதிக்கப்பட்டு ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகள்.
  • நிதி விஷயத்திலும் மத்திய அரசிற்கு அதிகமான அதிகாரமிருப்பது தெளிவாக விளங்குகிறது. முன்னேற்றத் திட்டங்களின் செலவுகளைச் சந்திப்பதற்காக மாநிலத்தின் நிதிகளின் மீதும் நன்கொடைகளின் மீதும் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முடியும். நிதி அவசரகாலத்தின் போது  மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகளை நிறுத்தி வைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுண்டு. மேலும் அவர் மாநிலத்தின் மற்ற செலவுகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும்.
  • மாநிலத்திட்டங்கள் அனைத்தும், மத்திய திட்டங்களை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு திட்டக்குழுவினால் அனுமதியளிக்கப்பட வேண்டும். மேலும் மாநிலங்கள் மத்திய அரசினால் பண உதவி அளிக்கப்படும் திட்டங்களை மேற்கொண்டு மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். திட்டக்குழு திட்ட முறைகளில் மத்திய அரசிற்கே அதிகமான அதிகாரங்கள் வழங்கியுள்ளது. எந்த விதமான முடிவெடுக்கும் அதிகாரமும் மாநிலங்களிடம் விடப்படவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களின் மீது ஒழுங்கற்ற முறையில் திணிக்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கிடையான நீர்ப்பிரச்சனைகள் – அரசியலமைப்பின் ஷரத்து 62 மாநிலங்களுக்கிடைப்பட்ட நீர்ப் பிரச்சனையைப் பற்றிய தீர்வுகளைக் கொடுக்கிறது. இதன் இரண்டு கூறுகள்:

  • நாடாளுமன்றச் சட்டத்தின்படி எல்லா மாநிலங்களுக்கும் இடைப்பட்ட நீரின் பயன்பாடு, பகிர்ந்தளித்தல் மற்றும் கட்டுப்பாடு போன்றவை குறித்து தீர்ப்புகள் வழங்க முடியும்.
  • மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ தலையிடுதல் கூடாது என்பதை நாடாளுமன்றம் எடுத்துரைக்க முடியும்.
  • இது தொடர்பாக நாடாளுமன்றம் இரண்டு சட்டங்கள் இயற்றியுள்ளது. ஆற்றுநீர் வாரியச் சட்டம் (1956) மாநிலங்களுக்கிடைப்பட்ட நீர்ப்பிரச்சனைச் சட்டம் (1956).

மாநிலங்களுக்கிடைப்பட்ட குழு

  • சரத்து 263: மாநிலங்களுக்கிடையிலும் அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இரு மாநிலங்களுக்கிடைப்பட்ட குழுவை உருவாக்கலாம். இது குடியரசுத்தலைவரால் உருவாக்கப்படவேண்டும்.
  • மாநிலங்களுக்கிடைப்பட்ட குழுவின் கடமைகளை வரையறுக்கும் உரிமை குடியரசுத் தலைவருக்கு இருந்தாலும் ஷரத்து 263 அதற்கான கடமைகளை வரையறுத்துள்ளது.
  • மாநிலங்களுக்கிடையே எழும் பிரச்சினைகளை விசாரித்து அவற்றிற்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
  • மத்திய அல்லது மாநில அரசுகளின் பொதுவான நலன்கள் சட்பந்தப்பட்ட விஷயங்கள் விசாரணை செய்து அது பற்றி விவாதிக்க வேண்டும்.
  • அரசுத் திட்டங்களின் மேம்பட்ட இணத்திற்காகவும், செயல்பாடுகளுக்காகவும் பரிந்துரைகள் வழங்க வேண்டும்.

மாநிலங்களுக்கிடைப்பட்ட தொழிலும் ,வணிகமும்

  • பகுதி XIII – ல் உள்ள ஷரத்து 301 முதல் 307 இந்தியாவின் எல்லைக்கு நடக்கும் தொழிலும், வணிகமும் பற்றி குறிப்பிடுகிறது.
  • ஷரத்து 301: இந்தியாவின் எல்லைக்குள் நடைபெறும் அனைத்து தொழில் மற்றும் வணிகம் சுதந்திரமாக நடைபெற வேண்டும். இதன் முக்கிய நோக்கம்
    மாநிலங்களுக்கிடையே எல்லைத்தடுப்பை உடைத்து அனைத்து மாநிலங்களையும் ஒன்றுபடுத்தி தொழில் மற்றும் வணிகங்களை சுதந்திரமாக உருவாக்குவது ஆகும்.
  • ஏற்கனவே எந்த மாநிலத்திலாவது எல்லையை ஒரு காரணமாக வைத்து தொழிலை தடை செய்தால், அது ஷரத்து 301-யை மீறியதாகக் கருதப்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து

  • இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 1-ன் படி ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • அதன்படி இந்திய அரசியலமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களும் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருந்தாது.
  • இந்தியாவிலேயே இந்த மாநிலத்திற்கு மட்டும் தான் தனியாக “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு” எனும் மாநில அரசியலமைப்பு உள்ளது.
  • ஜம்மு–காஷ்மீர் அரசியலமைப்பு நவம்பர் 17,1956ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு 26 ஜனவரி, 1957 அன்று முதல் அமலுக்கு வந்தது.
  • ஜம்மு–காஷ்மீர் மற்றும் இந்தியாவின் தற்போதைய உறவு நிலை:
  • ஜம்மு–காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்று அரசியலமைப்பின் பகுதி மற்றும் முதல் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது (இந்தியா மற்றும் அதன் எல்லைகள்)
  • ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கென தனி அரசியலமைப்பு உள்ளது. அந்த அரசியலமைப்பின்படி அது ஆட்சி செய்யப்படுகிறது.
  • நாடாளுமன்றம் இந்த மாநிலத்தில் மத்திய பட்டியலில் வரும் அனைத்து விவகாரங்களிலும் பொதுப்பட்டியலில் வரும் பெரும்பாலான விவகாரங்களிலும் சட்டமியற்ற முடியாது. ஆனால் தீவிரவாத செயல்கள் அரசுரிமைக்கு கேடு விளைவிப்பது. இந்திய எல்லை ஒற்றுமை மற்றும் இந்திய அரசியலமைப்பு போன்ற சில விவகாரங்கள் தவிர்த்து எஞ்சிய அதிகாரங்களில் சட்டமியற்றும் அதிகாரம் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்கே உண்டு.
  • உள்நாட்டுக் கலவரத்தினால் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படும் போது அந்த மாநிலத்தின் சம்மதமின்றி அங்கே அவசர நிலையைப் பிறப்பிக்க முடியாது.
  • அந்த மாநிலத்தில் நிதி அவசர நிலை காலம் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
  • குடியரசுத் தலைவர், அவருடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்பதற்காக அந்த மாநிலத்தின் அரசியலமைப்பை தற்காலிகமாக தடை செய்யும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை.
  • மாநில அவசர நிலை(குடியரசுத்தலைவர் ஆட்சி) இங்கு பிறப்பிக்கப்பட முடியும். ஆனால் இந்திய அரசியலமைப்பின் படியல்லாது  அம்மாநில அரசியலமைப்பின்படி அரசியலமைப்பு ஸ்தாபனம் சரிவர இயங்கவில்லையெனில் மாநில அவசர நிலை பிறப்பிக்கப்பட முடியும். இதுவே இரண்டு வகையில் செயல்படுத்தலாம்.இந்திய அரசியலமைப்பின்படி குடியரசுத்தலைவர் ஆட்சி, அம்மாநில அரசியலமைப்பின்படி ஆளுநர் ஆட்சி
  • 1986ல் இம்மாநிலத்தில் முதன்முதலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டது.
  • ஜம்மு–காஷ்மீர் மாநில நீதிமன்றம் அடிப்படை உரிமைகள் நிறைவேற்றப்படுவதற்கு நீதிப் பேரணை பிறப்பிக்க முடியும். மற்ற எந்தத் தேவைகளுக்காகவும் பிறப்பிக்க முடியாது.

PDF Download

TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  -ல் சேர கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!