9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடங்கள் குறைப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு!!
நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ அறிவியல் பாடத்தில் குறிப்பிட்ட பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு:
கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மாதங்கள் ஆன நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் முழுவதுமாக பாடங்களை நடத்தி முடிக்க முடியாத காரணத்தினால் பாடத்திட்டங்களை குறைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாறும் அமைச்சுப் பணியாளர்கள் – பெயர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு!!
இதன்படி ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் 30% வரை குறைக்க அரசு உத்தரவிட்டது. தற்போது 9 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட பாடத்திட்டங்களில் குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் படிப்புகளுக்கு அனுமதி – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
இவ்வாறு குறைக்கப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பாடங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் காணலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் பல நாள் கழித்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்விச்சுமை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்