சி.பி.எஸ்.இ.பொதுத்தேர்வு தேதி தகவல் உண்மை இல்லை !! – சி.பி.எஸ்.இ.விளக்கம்
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறித்து தற்போது ஒரு தகவல்கள் பரவி வருக்கிறது. அந்த தகவல் உண்மை இல்லை என தற்போது சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
பொதுத்தேர்வுகள் :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
TN Police “FB
Group” Join Now
இதனால் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியது. ஆனால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
உண்மை இல்லை !!
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு தொடர்பான தகவல்கள் வேகமாக பரவியது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும், அது போலியான தகவல் எனவும் சி.பி.எஸ்.இ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்தவுடன் விரைவில் தேர்வு குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |