CBSE 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி 2021 – நாளை மாலை அறிவிப்பு!!

0
CBSE 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி 2021 - நாளை மாலை அறிவிப்பு!!
CBSE 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி 2021 - நாளை மாலை அறிவிப்பு!!
CBSE 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி 2021 – நாளை மாலை அறிவிப்பு!!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் 2021 தேதி குறித்த முழு விபரங்கள் நாளை (டிச.31) மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

CBSE பொதுத்தேர்வுகள்:

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிபிஎஸ்இ 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாரிய தேர்வுகளின் தேதிகளை நாளை (டிசம்பர் 31) மாலை 6 மணிக்கு சமூக வலைதள நேரலையின் போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கவுள்ளார். அதன் பின்னர் அதற்கான முழு விபரங்கள் CBSE வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான மாதிரி ஆவணங்களையும், 2021 ஆம் ஆண்டிற்கான அதன் மதிப்பெண் திட்டங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseacademic.ac.in இல் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மன அழுத்தத்தை சமாளிக்க மாணவர்களுக்கு உதவுவதற்காக சிபிஎஸ்இ ஒவ்வொரு பாடத்திற்கும் பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் தேர்வுகள் ஆன்லைன் முறை அல்லாமல், பேப்பர் எழுதுதல் முறையில் தான் இருக்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மருத்துவ உளவியலில் எம்ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்குனரகம்!!

சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தேர்வின் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களையும் சரிபார்க்கலாம். இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பில் சிக்கல்கள் நிலவுவதால், பொதுத்தேர்வுகளை மே அல்லது ஜூன் வரை ஒத்திவைக்குமாறு சிபிஎஸ்இ.,விடம் மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!