TNPSC குரூப் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் – தேர்வர்கள் தவிப்பு!!

1
TNPSC குரூப் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்
TNPSC குரூப் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்
TNPSC குரூப் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் – தேர்வர்கள் தவிப்பு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஆதார் எண்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தேர்வுகளில் நடத்தப்படும் முறைகேடுகளை எளிதாக கண்டறிய விடைத்தாள்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளது TNPSC. இதனால் குரூப் 1 தேர்வுக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளில் ஒருமுறை அல்லது நிரந்தர பதிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது கட்டாயம் தங்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும். குரூப் 1 தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுகள் நடத்த ஏற்ற சூழ்நிலை இல்லாத காரணத்தால் தற்போது ஜனவரி 3-ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Download TNPSC Hall Ticket 2020 

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு ஆணையம் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது அதன்படி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இனிமேல் விண்ணப்பிக்கும் ஒருமுறை அல்லது நிரந்தர விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் எண்களை பதிந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பின் ஹால் டிக்கெட்களை பதிவு செய்யும் போதும் ஆதார் எண்ணை பதிந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது.

TNPSC குரூப் 1 தேர்வு குறித்த புதிய செய்தி வெளியீடு

இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த நிரந்தர மற்றும் ஒருமுறை விண்ணப்பதாரர்கள் தற்போது ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர். தேர்வு நெருங்கிவரும் வேளையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதால் விண்ணப்பதாரர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!