தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?? மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் என்பது அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதில் 100 யூனிட் மின்சாரத்திற்கு இலவசம் போக மீதமுள்ள பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்வதாக நேற்று (செப்டம்பர் 26) தகவல் ஒன்று வெளியானது.
கூடிய விரைவில் வீடுகளில் மின் மீட்டரை மாற்ற நடவடிக்கை..!! மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!!
தற்போது இந்த தகவல் தொடர்பாக மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதாக வந்த செய்தியில் உண்மையில்லை’. ‘சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்தியை நம்ப வேண்டாம்’. ‘மேலும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை’ என தெரிவித்துள்ளது.



























