அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்?.. அப்போ இந்த விஷயத்தை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..
பெரும்பாலான மக்கள் இடையூரின்றி பயணம் செய்ய ரயிலில் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க, தினசரி வேலைகளுக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்பவர்கள், திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் “முன்பதிவு இல்லாத டிக்கெட்” (Unreserved Ticket) எடுத்து பயணம் செய்கின்றனர். மேலும், “Unreserved Ticketing system” (UTS) செயலி மூலம் அன்ரிசர்வுட் டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, நாம் பயணம் செய்ய முடியாத பட்சத்தில் அந்த டிக்கெட்டை எவ்வாறு கேன்சல் செய்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
மதுரை “டங்ஸ்டன்”சுரங்கம் எதிர்ப்பு…தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்…!! “முழு விவரம் உள்ளே”..!!
அதாவது UTS செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய முதலில் உங்களின் செல்போன் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு Log in செய்ய வேண்டும். பின்பு “cancel ticket” (டிக்கெட் ரத்து செய்) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், டிக்கெட் கேன்சல் தொகையை கழித்த பிறகு ரீபண்ட் தொகை குறித்த விவரங்கள் குறித்து ஒரு சிறிய பாப்-அப் பாக்ஸ் தோன்றும். அதன் பின் முன்பதிவு செய்த அன்ரிசர்வுட் டிக்கெட்டை ரத்து செய்ய “சரி” என்று விருப்பம் தெரிவித்தால் டிக்கெட் கேன்சல் கட்டணம் கழித்தது போக மீதியுள்ள ரீபண்ட் தொகையானது R-wallet அல்லது உங்கள் வங்கி கணக்குக்கு சில மணி நேரத்துக்கு பிறகு கிரெடிட் செய்யப்படும். மேலும் ஒவ்வொரு அன்ரிசர்வுட் டிக்கெட் கேன்சல் செய்யும் போது ரூ.30 பிடித்தம் செய்யப்படும். இந்த விதி 30 ரூபாய்க்கு குறைவாக முன்பதிவு செய்யப்பட்ட அன்ரிசர்வுட் டிக்கெட்டிற்கு பொருந்தாது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

























P M SHRI KENDRIYA VIDYALAYA SCHOOL ( KVS ) CENTRAL GOVT SCHOOL….. CBSE SYLLABUS….. NCERT TEXT BOOKS… ADMISSION FOR – 2025 – 2026 – 2027. GUIDELINES for CALL ME.9448349418.Ravi.BANGALORE. 560001