நாடு முழுவதும் பிப்., 26 ஆம் தேதி “பாரத் பந்த்” – CAIT அறிவிப்பு!!
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கடைபிடிக்க கொண்டுவரப்பட்ட திட்ட விதிமுறைகளை எளிதாக்கும் படி கோரிக்கை வைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்திந்திய வணிகர்கள் சங்கம் (CAIT) அறிவித்துள்ளது.
ஒரே வரி விதிப்பு முறை:
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த திட்டம் காரணமாக ஒரு பொருள் மீது 4 அடுக்குகளில் கீழ் விதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பிலிருந்து வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அரசு அதற்கு செவி சாய்க்காத நிலையில் தற்போது அனைத்திந்திய வணிகர்கள் சங்கம் (CAIT) சார்பில் ஜிஎஸ்டி விதிமுறைகளை எளிதாக்கும்படி கோரிக்கை வைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து வணிகச் சந்தைகளும் இயங்காது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு வயது வரம்பு – தமிழக அரசுக்கு உத்தரவு!!
இந்த அமைப்பு மூலமாக ஜிஎஸ்டி வரி முறைகளை பரிசீலனை செய்து வரி இணக்கத்தை எளிமையாக்கவும், வரி செலுத்துவோருக்கு ஏதுவாகவும் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தது. இந்த அமைப்புடன் இணைந்து அனைத்திந்திய போக்குவரத்து நலக் கூட்டமைப்பும் (AITWA) போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்படுவார்கள்.
நாடு முழுவதும் NCHM 2021 நுழைவுத்தேர்வு – ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும்!!
இதுகுறித்து அனைத்திந்திய வணிகர்கள் சங்கப் பொதுச் செயலாளரான பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், “பிப்ரவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் தர்ணா போராட்டங்கள் நடைபெறும். வணிகச் சந்தைகள் அனைத்தும் இழுத்து மூடப்படும். 40,000க்கும் மேற்பட்ட வணிகர்களும், வர்த்தக கூட்டமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி உள்ளனர்”, இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்