தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் வரும் மே 2 ஆம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் முக்கிய சில தீர்மானங்கள் குறித்து விவாதம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அமைச்சரவை கூட்டம்:

தமிழகத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மே 2 ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதாவது இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

மேலும், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்குவதற்கான திட்டம் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில் இந்த திட்டம் குறித்தும் விவாதம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் 8 மணி நேரமாக இருந்த வேலை நேரம் தற்போது 12 மணி நேரமாக உயர்த்தப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த தீர்மானம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!