
சிறு,குறு தொழில் செய்வோருக்கு ரூ.20 லட்சம் வழங்கும் தமிழக அரசு…!! ” உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்”..!!
நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும், குறைந்த முதலீட்டில் சொந்த தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு பல்வேறு கடன் உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசானது ” கருணாநிதி கடன் உதவி ” என்ற திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு, தொழில் தொடங்குவதற்கும், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் கடன் வழங்கி வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களின் நிதி சுமையை குறைக்கும் பொருட்டு ரூ.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பதை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
தகுதியுள்ளவர்கள்:
1. இந்த திட்டத்தில் 18-65 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். மேலும், இது 7% வட்டியில் ரூ. 20 லட்சம் கடன் உதவி வழங்குகிறது.
2. தொழில் முனைவோர்கள் 600 புள்ளிகள் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.3. கடன் பெறும் நிறுவனங்கள், கடன் பெறும் ஆண்டில் இருந்து முந்தைய 2 ஆண்டுகளில் நல்ல வருமானத்தை பெற்றிருக்கும் நிறுவனமாக இருத்தல் வேண்டும்,
4.தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் “தாய்கோ” வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த கருணாநிதி கடன் உதவி தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
5. தமிழக அரசு இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் மட்டுமே ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.

























