
மீண்டும் மீண்டும் எலான் மஸ்க் மீது எழும் புகார்கள்.. நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் அரசாங்கங்கள்..
X நிறுவனத்தின் உரிமையாளரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பருமான எலான் மஸ்க், விண்வெளிப் பயணம் மற்றும் மின்சார வாகனங்களின் தொழில்நுட்ப சாதனைகளுக்காக 2018 இல் பிரிட்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மஸ்க்கின் நடத்தை, மற்றும் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறுவதாக மஸ்க் மீது புகார் வைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மார்ச் 29 அன்று ரேஷன் கடை செயல்படுமா…?? தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்ட முக்கிய செய்தி
அதாவது, “உலகின் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனில் உள்ள ராயல் சொசைட்டி, நடத்தை விதிகளை மீறியதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க்கின் உறுப்பினர் பதவியை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது. மேலும், இது குறித்து விவாதிக்க ஒரு பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை பின்னர், எலான் மஸ்க்கின் உறுப்பினர் பதவி பறிக்கப்படாது என பிரிட்டன் ராயல் சொசைட்டி தற்போது அறிவித்துள்ளது. இருப்பினும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை எலான் மஸ்க் கொண்டிருப்பதாக அந்நிறுவனத்தை சார்ந்த 3500 விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்”என்பது குறிப்பிடத்தக்கது .

























